கிடைக்குமா கல்வி உதவித்தொகை? உயர்கல்வி  செலவுக்காக எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிடைக்குமா கல்வி உதவித்தொகை? உயர்கல்வி  செலவுக்காக எதிர்பார்ப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோவை: பள்ளி கல்வி நிறைவு செய்தோருக்கான கல்வி உதவித்தொகை, முன்கூட்டியே வழங்கினால், உயர்கல்வி செலவினங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.தமிழக அரசு சார்பில், பத்தாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை இடைநிற்றல் இன்றி, படித்த மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக,உதவித்தொகை வழங்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியோர், இத்தொகை கொண்டு, உயர்கல்வி தொடரலாம். இதில்,பத்தாம் வகுப்புக்கு, 1,500 ரூபாய், பிளஸ்1 வகுப்புக்கு 1,500 ரூபாய் மற்றும் பிளஸ்2வுக்கு, 2,000 ரூபாய் வைப்பு தொகையாக செலுத்தப்படும். பிளஸ்2 முடித்ததும், வைப்புத்தொகைக்கான வட்டியுடன் சேர்த்து, 6,250 ரூபாய் உதவித் தொகையாக, வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது.இதற்கு ஆண்டுதோறும், மாணவர்களிடம் இருந்து வங்கி கணக்கு எண் சார்ந்த தகவல்கள் பெறப்படுகின்றன. இதில், பிழை இருந்தால், உதவித்தொகை கிடைப்பதில்லை. இத்திட்டத்தில் விடுபட்ட பயனாளிகள், மீண்டும் விண்ணப்பிக்க எந்த வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை.மேலும், ரொக்கப்பணம் ஆண்டு இறுதியில் வழங்கப்படுகிறது. இதை, உயர்கல்விக்கான செலவினங்களுக்கு பயன்படுத்தி கொள்ளும் வகையில், முன்கூட்டியே வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும் என்பது, பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறுகையில், 'உயர்கல்வியில் குழந்தைகளை சேர்க்க, போதிய பணமில்லாத பட்சத்தில், கடன் வாங்க வேண்டியுள்ளது. இதை, வட்டியுடன் திருப்பி செலுத்துவதற்குள் படாதபாடு படுகிறோம். கல்வி உதவித்தொகை முன்கூட்டியே வழங்கினால், இச்செலவினங்களுக்கு உபயோகமாக இருக்கும். இதோடு, தகுதியுள்ளவர்களுக்கு உதவித்தொகை சென்றடைந்ததா என்பதை ஆய்வு செய்தால், ஏழை மாணவர்கள் முழுமையாக பயனடைவர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X