கழிப்பறையை பயன்படுத்தினால் மூளை வளர்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கழிப்பறையை பயன்படுத்தினால் மூளை வளர்ச்சி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கமுதி, கமுதி அருகே புதுக்கோட்டை அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுடன் உரையாடிய கலெக்டர் நடராஜன் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்தை பெருக்கும் வகையில் 5,717 பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரம் பண்ணை குட்டைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கண்மாய்கள் குடிமராமத்து, நீர்வடிப்பகுதி திட்டத்தின்கீழ் மராமத்து செய்யபட்டு வருகிறது. விவசாய நிலங்களை சீரமைக்கும் வகையில் கண்மாய்கள், குளங்களிலிருந்து மண் எடுக்க அனுமதி வழங்கபடவுள்ளது. இதனை முறைகேடாக பயன்படுத்தாமல் விவசாயத்திற்காக மட்டுமே பயன்படுத்த உத்தரவிடபட்டுள்ளது. திறந்தவெளியில் கழிப்பறைக்கு செல்லும் மாணவர்கள், மக்களின் அறிவு வளர்ச்சி குறைவாகவே இருக்கும், கழிப்பறையை பயன்படுத்தினால் தீர்க்கமான சிந்தனை திறன் அதிகரித்து, மூளை வளர்ச்சி அதிகரிக்கும். இதனால் மாணவர்களின் சிந்தனை திறன் அதிகரிப்பதோடு, அறிவு வளர்ச்சி பெறும், மாணவர்கள் இதனை தங்களின் பெற்றோர்களுக்கு வலியுறுத்தி, கட்டாயம் கழிப்பறையை பயன்படுத்த அறிவுறுத்தவேண்டும் என, கலெக்டர் மாணவர்களிடம் வலியுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X