'தமிழ்நாட்டை சீரழிக்கும் கூட்டம்' மத்திய அமைச்சர் 'காட்டம்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தமிழ்நாட்டை சீரழிக்கும் கூட்டம்' மத்திய அமைச்சர் 'காட்டம்'

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: 'நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல், ஒரு தரப்பு தொடர்ந்து, அரசியல் காரணங்களுக்கான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது,' என்று மத்திய அமைச்சர் பேசினார்.மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க, நேற்ற திருப்பூருக்கு வந்த, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:மாற்றங்களால், திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகத்தில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எந்தவொரு முன்னேற்றத்திற்கான நடவடிக்கை எடுக்கும் போதும், இவ்வாறு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.ஆனால், தமிழகத்தை சீரழிக்கும் வகையில், ஒரு தரப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரி பிரச்னை உள்ள கர்நாடகாவில் வெளிநாட்டு முதலீடு, 38.8 சதவீதமாக உள்ளது.ஆனால், அதே பிரச்னை உள்ள தமிழகத்தில், அதில் ஒரு சதவீதம் கூட வரவில்லை. புதிய தொழிற்சாலைகள் வருவது, தொழில் வளம் பெருக்கி, வேலைவாய்ப்பு உருவாக்குவது, வரும் தலைமுறைக்கு பயன்படுவது, நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல், ஒரு தரப்பு தொடர்ந்து, அரசியல் காரணங்களுக்கான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எந்த தொழிற்சாலை வந்தாலும், முட்டுக்கட்டை போட்டு வருகிறது.இதே நிலை நீடித்தால், ஒட்டு மொத்தமாக மாநிலத்தின் நலன் பாதிக்கப்படும். இவற்றை பொதுமக்கள் புரிந்து கொண்டுள்ளனர். நாட்டை அழிப்பதற்காகவே அந்த கூட்டம் தொடர்ந்து செயல்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை