சாமியாரின் ரூ.1,000 கோடி சொத்து; உதவியாளருக்கு அடித்தது,'ஜாக்பாட்' Dinamalar
பதிவு செய்த நாள் :
சாமியாரின் ரூ.1,000 கோடி சொத்து
உதவியாளருக்கு அடித்தது,'ஜாக்பாட்'

போபால் : ம.பி.,யைச் சேர்ந்த, மறைந்த ஆன்மிக சொற்பொழிவாளர், பையு மஹாராஜின், 1,000 கோடி ரூபாய் சொத்துக்கள், அவரது உதவியாளர், வினாயக்கிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

சாமியார்,ரூ.1000 கோடி,சொத்து,உதவியாளருக்கு,அடித்தது,ஜாக்பாட்


மன உளைச்சல் :


மத்திய பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இங்குள்ள இந்துாரைச் சேர்ந்த, பிரபல ஆன்மிக சொற்பொழிவாளரும், சாமியாருமான, பையு மஹாராஜ், 50, கடந்த, 2015ல், இரண்டாவது திருமணம் செய்தார்.

முதல் மனைவிக்கு பிறந்த மகளும், இவருடன் வசித்து வந்தார். இவரது இரண்டாவது மனைவிக்கும், இவரது மகளுக்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், பையு மஹாராஜ், சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சமீபத்தில், அவரது வீட்டில், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தார்.

மன அழுத்தம் காரணமாக, தற்கொலை செய்து கொள்வதாக, அவரது தற்கொலை குறிப்பில் எழுதி வைத்திருந்தார். ம.பி., மஹாராஷ்டிரா, உ.பி., உள்ளிட்ட பல மாநிலங்களில் இவரது ஆதரவாளர்கள், இவரது ஆன்மிக கருத்துகளை பின்பற்றுவோர் அதிகம் பேர் உள்ளனர்.

அவருக்கு சொந்தமாக, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில், தன் சொத்துக்கள் அனைத்தையும், தன் உதவியாளர்

Advertisement

வினாயக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என, பையு மஹாராஜ், தன் தற்கொலை குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.

நம்பிக்கை :


இதையடுத்து, 15 ஆண்டுகளாக, மஹாராஜின் நிழல் போல் அவருடனே பயணித்த, அவரது நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்த, வினாயக்கிடம், 1,000 கோடி ரூபாய் சொத்துக்கள் ஒப்படைக்கப்பட உள்ளன. இதை, மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
16-ஜூன்-201811:08:30 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)இவருக்கு உதவியாளரா என்னை சேர்த்துக்கொள்வாரா ? என்னுடைய விவசாய பணியில் நொந்து நூடுல்ஸ் ஆவது தான் மிச்சம் .

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜூன்-201820:57:26 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இன்னிக்கி ஒரு ரொம்ப நல்லவனை, ரொம்ப கெட்டவன் (கேட்டவன்) ஆக்கிட்டாய்ங்க.

Rate this:
Nellai Ravi - Nellai,இந்தியா
15-ஜூன்-201819:29:41 IST Report Abuse

Nellai Raviசெய்தியே தவறு. மனைவி மக்கள் இல்லாமல் இருப்பவரே சாமியார். இவர் அவ்வாறு அல்லர், பின் எப்படி சாமியார். சொபொழிவு ஆற்றுவது இவர் தொழில். இவர் சித்தரும் அல்லர். எனக்கென்னவோ 1000 கோடி என்பது இட்டுக்கட்டிய தொகை என்று தோன்றுகிறது, இவர் யாரையும் கண் வரவழைக்கிறேன், நடக்க வைக்கிறேன் என்று ஏமாற்றியதாகவும் தெரியவில்லை. இறந்து விட்டார் விட்டுவிடுங்கள்.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-ஜூன்-201816:13:07 IST Report Abuse

Nallavan NallavanBhaiyyu Maharaj (29 April 1968 – 12 June 2018), born as Uday Singh Deshmukh, was a spiritual guru from Indore, Madhya Pradesh, India. Bhaiyyu was known for interest in luxury vehicles and poetry.[6] Bhaiyyu travelled in a Mercedes-Benz car and owned Rolex watches.[3] He owned a bungalow in Indore.[3] என்கிறது விக்கிபீடியா ..... ஆன்மிக குரு என்றுதான் சொல்லியிருக்கிறது .... சொற்பொழிவாளர் இல்லை .....

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜூன்-201820:53:30 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்விக்கி சொன்னா தான் உண்மையா.. நாங்க சொன்னா நம்பமாட்டீங்களா? "சொற்பொழிவாளர்"ன்னு உரைகல் இப்ப சொல்லிடிச்சில்லே. அப்பறம் என்ன, சொற்பொழிவாளர் தான். போங்கப்பூ.....

Rate this:
Sahayam - cHENNAI,இந்தியா
15-ஜூன்-201814:35:10 IST Report Abuse

Sahayam1000 கொஞ்சம் அதிகம் தான்

Rate this:
A.Gomathinayagam - chennai,இந்தியா
15-ஜூன்-201814:33:07 IST Report Abuse

A.Gomathinayagamஇது ஏமாளிகள் உலகம். ஆன்மீக ஏமாளிகளால் ஓரு ஓழுக்கம இல்லாத சொற்பொழிவு நிகழ்த்து பவரிடம் 1000 கோடி இழந்து இருக்கின்றனர் இந்த சொத்தை அரசு கையக படுத்த வேண்டும்

Rate this:
vns - Delhi,இந்தியா
15-ஜூன்-201813:43:21 IST Report Abuse

vnsபையு மகாராஜ் ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர், சாமியார் அல்லர். சமூக சீர்திருத்தவாதி, KhanCross அரசிற்கு/கட்சிக்கு மத்தியஸ்தர்.. அவர் பணம் கேட்டு வாங்கியதல்ல பணம் கிடைத்தை வைத்துக்கொண்டவர்.. எந்த கிருத்துவ மத தலைவர் அல்லது இஸ்லாமியா மத தலைவர் பணம் இல்லாமல் இருக்கிறார்கள்.. டெல்லியில் உள்ள இமாமிற்கு ரூ பத்தாயிரம் கோடிக்கு மேல் பணம் இருக்கிறது அதற்க்கு அவர் வரி கூட கட்டுவது இல்லை.. போப் இடம் இல்லாத பணமா.. பணக்காரன் பேச்சை மதிக்கும் மக்களிடம் பணக்காரனாக பேசினால் என்ன தவறு.. பணம் இல்லாமல் இருந்தால் யாரும் இவரை மதித்து செய்தி போட்டு இருக்க மாட்டார்கள். எத்தனை ஆன்மீக சொற்பொழிவாளர்கள் தமிழகத்திலேயே பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இங்கே கருத்து எழுதி இருக்கும் கூமுட்டைகள் அவர்களுக்கு பணமா கொடுக்கிறார்கள். ஒன்றுமே தெரியாத படித்தும் கூட இல்லாத கருணாநிதி ஜெயலலிதா சசிகலா தினகரன் இவர்களிடம் இல்லாத பணமா அதைப்பற்றியும் கருத்து கூறுங்கள். அவர் அமைச்சரல்ல.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-ஜூன்-201814:11:48 IST Report Abuse

Nallavan Nallavan\\\\ பையு மகாராஜ் ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர், சாமியார் அல்லர். சமூக சீர்திருத்தவாதி, //// இது சாமியாரை விட இன்னும் கேவலமான நிலை நண்பரே .... ஆன்மிகச் சொற்பொழிவின் நோக்கமே இறைவனின் அருமை, பெருமைகளை அறியவைத்து அவன் மீது பக்தி செலுத்தும் வண்ணம் மக்களுக்கு எளிமை, தன்னடக்கம் போன்ற நற்பண்புகளைப் புகட்டுவதே ..... இறைவன் ஒன்றே சொத்து .... என்று கூறிவிட்டு பணக்காரர்களிடம் கோடிக்கணக்கில் நன்கொடையாகக் கறந்தார் என்றால் நன்றாகவா இருக்கிறது ? இமாமிடம் பணக்குவியல் இருந்தால் ஹிந்து சாமியாரிடமும், சாரி .... சொற்பொழிவாளரிடமும் இருக்கலாமா ?...

Rate this:
sankararaman - chennai,இந்தியா
15-ஜூன்-201815:35:40 IST Report Abuse

sankararamanஇந்து மதம் பந்தின் பின்னால் சென்ற தில்லை. பெரும்பான்மையான இந்துக்கள் 40 வயதிர்ட்க்கு மேல் ஆசை குறைத்து வாழ்கிறார்கள் . உங்களை போன்ற காசுக்கு மதம் மாறிய கூட்டங்களை சமாளிக்கவே இந்துக்களுக்கு பணம் தேவைப்படுகிறது. மத மாற்றத்திற்கு முன் இந்து சொற்பொழிவாளர்களை மக்கள் மதித்து MUDINTHATHAI கொடுத்தார்கள் . என்று நாட்டில் மதமும் மத மாற்றமும் வ்யாபாரமாகியதோ கூலிக்கு மாறடிக்க உங்களை போன்ற துரோகிகள் வந்தன ரோ அன்று முதல் போலி ஆன்மீகம் தலை தூக்கியது .. முதலில் நீங்கள் மனம் மாறுங்கள் ....

Rate this:
Raman - kottambatti,இந்தியா
15-ஜூன்-201816:42:39 IST Report Abuse

Ramanஆசை குறைந்து வாழ்ப்பவனுக்கு எதுக்கு ஆயிரம் கோடி.. ?...

Rate this:
vns - Delhi,இந்தியா
15-ஜூன்-201818:14:20 IST Report Abuse

vnsNallavan Nallavan - Kolkata,இந்தியா.. இந்து சொற்பழிவாளரிடம் பணம் இருக்கவேண்டுமா வேண்டாமா என்பதை நானோ நீங்களோ அல்லது உங்களைப் போன்ற மனிதர்களோ தீர்மானிக்க முடியாது.. அதற்கான தகுதியும் அறிவும் உங்களிடமோ அல்லது என்னிடமோ இல்லை. ஏன் உலகில் உள்ள யாரும் அடுத்தவரிடம் பணம் செய்யாதே என்று கூறவோ அல்லது யாருக்கு தானமாகக் கொடுக்கவேண்டும் என்று கூறவோ உரிமை இல்லை. இந்துக்கள் ஏமாளிகள் அல்ல.. பணம் செய்யாதே என்று எந்த இந்துவும் கூறுவதும் இல்லை இந்துக்களின் வேதங்களிலும் இல்லை. லக்ஷியை வணங்குவதே பணத்திற்காகத்தான். அப்புறம் //ஆன்மிகச் சொற்பொழிவின் நோக்கமே இறைவனின் அருமை, பெருமைகளை அறியவைத்து அவன் மீது பக்தி செலுத்தும் வண்ணம் மக்களுக்கு எளிமை, தன்னடக்கம் போன்ற நற்பண்புகளைப் புகட்டுவதே// இது உங்களுடைய கருத்து இதுதான் சரி என்று இந்துக்கள் கூறினார்களா ? எளிமை தன்னடக்கத்தை புகட்டுபவன் அதேபோல இருக்கவேண்டும் என்று இல்லையே. உங்கள் குழந்தையை படி என்று கூறும் நீங்கள் படிப்பதில்லையே. உங்கள் வேலையை நீங்கள் நேர்மையாக செய்தால் போதும். மற்றவர்களை குறிப்பாக இந்துக்களைப்பற்றி இழிவாக எழுதவேண்டாம்....

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
15-ஜூன்-201811:24:32 IST Report Abuse

balakrishnanஒரு சாமியாருக்கு எதுக்கு 1000 கோடி., எங்கிருந்து வந்துச்சி, அந்த காலத்தில் சாமியாருக்கு என்று சொந்தம் எதுவும் இல்லை, அந்த மாதிரி சாமியாரெல்லாம் இன்றைக்கு பிச்சைக்காரனுக்கு கூட சமமானவன் இல்லை, காவி கையில் இருந்தால் எவ்வளவு மதிப்பு பாருங்கள், பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது

Rate this:
Sabari - Tanjore,இந்தியா
15-ஜூன்-201814:38:44 IST Report Abuse

SabariBalakrishnan உங்கள் கருத்து ஒருதலை பட்சமாக இருக்கிறது. காவி என்பது தீண்டத்தகாதது அல்ல. அது ஒரு மதத்தின் பொதுவான அடையாளம். காவி என்பதை கொடூர எண்ணத்துடன் சித்தரிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். அப்படியென்றால் பச்சை, வெள்ளையை இதுபோல் பேசவேண்டும். ஒரு மதத்தின் அடையாளத்தை இப்படி மோசமாக சித்தரிப்பவர்கள் மதத்தை காட்டிக்கொடுக்க தயங்காதவர்கள். இந்து மதத்தில் இருக்க லாயக்கற்றவர்கள். ....

Rate this:
Anand - chennai,இந்தியா
15-ஜூன்-201816:03:05 IST Report Abuse

Anandஏன்டா எப்பப்பாத்தாலும் காவி காவினு ஊளையிடுறே, உனக்கு காவிகளின் காலை கழுவாவிட்டால் தூக்கம் வராதா?...

Rate this:
Raman - kottambatti,இந்தியா
15-ஜூன்-201816:43:29 IST Report Abuse

Ramanஅவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க எதுக்கு அவ்வளவு பணம்.....

Rate this:
Ramesh - chennai,இந்தியா
15-ஜூன்-201811:12:02 IST Report Abuse

Rameshkottambatti,இந்தியா 15-ஜூன்-2018 06:02 சாமியாருக்கு 1000 கோடி சொத்து, கையில் துப்பாக்கி.. வாழ்க இந்தியா...அவரை சாமியார் என்று சொல்லாதீர்கள் வேற எதாவது பேர் கொடுங்கள்.. எல்லாவற்றையும் துறந்தால் தான் அவன் துறவி, சாமியார் எல்லாம்...

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-ஜூன்-201810:06:51 IST Report Abuse

Nallavan Nallavanமாற்று மதத்தைச் சார்ந்த வாசகர்களும் எல்லை மீறாமல் விமர்சிக்கிறார்கள் .... நல்லது ..... உண்மையான ஆன்மிகம் பற்றி ஹிந்துக்களுக்கே தெரியாததால் போலிகளைத் துறவிகளாக ஏற்கிறார்கள் .... வழிகாட்ட ஆன்மிக குரு தேவைதான் .... ஆனால் அவரே குறையுடையவராக இருக்கக் கூடாது .... ஆகவே "இறைவனுக்கும் உனக்கும் நடுவில் வேறு மனிதர் எவரும் தேவையில்லை" என்ற கோட்பாட்டைத் தன்னகத்தே கொண்டுள்ள இஸ்லாம் இந்த விஷயத்தில் பாராட்டத் தக்கது ....

Rate this:
Shriram - Chennai,இந்தியா
15-ஜூன்-201812:01:57 IST Report Abuse

Shriramஇப்போது இவர்கள் மாறி வருகிறார்கள்.....

Rate this:
Sabari - Tanjore,இந்தியா
15-ஜூன்-201814:45:22 IST Report Abuse

SabariNallavan Nallavan ...நல்லவரே….உங்கள் கருத்தை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் வேறு மனிதர் தேவையா இல்லையா என்பதை இறை வழிபாடு செய்யும் மனிதன் தீர்மானிக்கட்டும்... வேறு யாரும் அதில் தலையிட வேண்டாம். எனக்கும் இறைவனுக்கும் இடையில் யார் வேண்டும் வேண்டாம் என்பதை நான் தான் தீர்மானிக்கவேண்டும்...அதன் படிதான் என் மனதும் எண்ணமும் நடக்கும். அதுபோல்தான் ஒவ்வொரு தனிமனிதனும்....

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-ஜூன்-201815:03:30 IST Report Abuse

Nallavan Nallavan@சபரி, எனது கருத்தை மீண்டும் படியுங்கள் (வழிகாட்ட ஆன்மிக குரு தேவைதான் .... ஆனால் அவரே குறையுடையவராக இருக்கக் கூடாது ...) தெளிவு பிறக்கும் .... அறியாமையில் உழன்று கொண்டு காழ்ப்புணர்வால் வாடாதீர் .......

Rate this:
Sabari - Tanjore,இந்தியா
15-ஜூன்-201815:39:06 IST Report Abuse

Sabari@.அவர் போலியா உண்மையானவரா என்பதை தீர்மானிக்க வேண்டிய இடத்தில் இருப்பது அந்த மாநில மக்களும், அவரின் கருத்துக்களை, போதனைகளை பின்பற்றும் பொதுமக்கள்தான். ///"இறைவனுக்கும் உனக்கும் நடுவில் வேறு மனிதர் எவரும் தேவையில்லை" என்ற கோட்பாட்டைத் தன்னகத்தே கொண்டுள்ள இஸ்லாம் இந்த விஷயத்தில் பாராட்டத் தக்கது …//// மசூதிகளில் மத பிரசங்கம் நடத்துபவர்கள் யார்? என்பதை சிறிது விளக்கமுடியுமா?...

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-ஜூன்-201816:28:38 IST Report Abuse

Nallavan Nallavanஆன்மிக குரு தேவையே. ஒரே ஒரு கண்டிஷன். அவர் நமக்கு வழிகாட்டும் தகுதியைக் கொண்டவராக இருக்க வேண்டும். இறைவனை அடைய வழிகாட்டாவிட்டாலும், குறைந்த பட்சம் இறைவனை விரும்பவாவது வழி காட்டவேண்டும். பகவத் கீதையிலேயே கிருஷ்ணர் சொல்லியிருக்கிறாரே, ஆத்மா (ஜீவாத்மா), தன் முயற்சியால் முன்னேற வேண்டும் என்று. வளராத பாம்பு ஒன்று, ஒரு தவளையை விழுங்கிவிட்டால் பாம்புக்கும் அவஸ்தை. விழுங்கப்பட்ட தவளைக்கும் உடனடியாக உயிர் போகாது. பெரிய பாம்பு விழுங்கினால் தவளையும் சில நிமிடங்களில் இறக்கும் .... பாம்புக்கும் ஜீரணமாகும் என்று அரைகுறை குருவுக்கு சிஷ்யனாக ஆவதின் கஷ்டத்தைச் சொல்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்...

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-ஜூன்-201816:31:25 IST Report Abuse

Nallavan Nallavan\\\\ மசூதிகளில் மத பிரசங்கம் நடத்துபவர்கள் யார்? என்பதை சிறிது விளக்கமுடியுமா?... //// நான் இஸ்லாமியன் அல்லன் ..... மசூதிகளில் நானறிந்தவரை தொழுகைதான் நடக்கிறது .... அது சரி ..... எனது கருத்திலிருந்து நான் இஸ்லாத்தை ஆதரிப்பதாக நீங்கள் ஏன் புரிந்து கொண்டீர்கள் ? \\\\ இஸ்லாம் இந்த விஷயத்தில் பாராட்டத் தக்கது .... //// இந்த விஷயத்தில் என்பதை நீங்கள் பிடிக்கவில்லையா ?...

Rate this:
vns - Delhi,இந்தியா
15-ஜூன்-201818:19:14 IST Report Abuse

vnsஅப்போ எல்லோரின் தூக்கத்தையும் கெடுத்துக்கொண்டு தொழுகைக்கு கூப்பிடுவது யார் கடவுளா ? மசூதியில் இமாம் என்ற மனிதர் யார் ? கடவுளே தானா ? அறியாமல் பிதற்றும் உங்களுக்காக .. "In the Shi'a context, an imam is not only presented as the man of God par excellence, but as participating fully in the names, attributes, and acts that theology usually reserves for God alone.[3] " விக்கிப்பீடியாவில் இமாம் என்ற பெயரில் பார்க்கவும்....

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement