கவுன்சிலிங் நாட்கள் குறைப்பு கல்லூரி திடீர் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கவுன்சிலிங் நாட்கள் குறைப்பு கல்லூரி திடீர் அறிவிப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: மூன்று நாட்கள் நடக்கவிருந்த இளங்கலை பட்ட படிப்பு இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஒரு நாள் மட்டும் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில் இளங்கலை பட்ட படிப்பு (பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ.,) வுக்கான முதல்கட்ட கவுன்சிலிங் இம்மாதம், 4ம் தேதி துவங்கியது. பொது மற்றும் பாட வாரியாக, விளையாட்டு பிரிவு என தனித்தனியே நடந்த கவுன்சிலிங்கில், 600 இடங்களுக்கு அட்மிஷன் உறுதி செய்யப்பட்டது.கல்லுாரியில் மொத்தமுள்ள, 805 இடங்களில், 600 இடம் பூர்த்தியான நிலையில், மீதமுள்ள இடங்களை நிரப்ப, வரும், 19 முதல் 21 வரை மூன்று நாள் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், குறைந்த இடம் மட்டுமே இருப்பதால், 19ம் தேதி ஒரு நாள் மட்டும் காலை, 9:00 முதல், மாலை, 3:30 மணி வரை கவுன்சிலிங் நடக்கும். மற்ற இருநாட்கள் கவுன்சிலிங் இருக்காது. கவுன்சிலிங் நடக்கும் நாளில், சுயசான்றிதழுடன் மாணவர் பங்கேற்கலாம், என, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) பாக்யமணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை