பொதுத்தேர்வு மாணவருக்கு இதய நிறைவு தியான பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொதுத்தேர்வு மாணவருக்கு இதய நிறைவு தியான பயிற்சி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: நஞ்சப்பா பள்ளியில், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு ஸ்ரீ ராமச்சந்திர மிஷன் சார்பில், இதய நிறைவு தியான பயிற்சி அளிக்கப்படுகிறது.திருப்பூர், நஞ்சப்பா பள்ளியில், கடந்தாண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வெழுதிய, 1,230 மாணவர்களுக்கு ஸ்ரீ ராமச்சந்திர மிஷன் சார்பில் இதய நிறைவு தியான பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால், மாணவர்கள் நல்லொழுக்கம், மன அமைதியுடன் தேர்வெழுதி நல்ல மதிப்பெண்களை பெற்றனர்.கடந்த ஆண்டுகளை விட, நடப்பாண்டு, பத்து சதவீத கூடுதல் தேர்ச்சி விகிதத்தை, நஞ்சப்பா பள்ளி மாணவர்கள் பெற்று தந்துள்ளனர். இந்நிலையில் நடப்பாண்டும், இதய நிறைவு தியான பயிற்சி அளிக்கப்படும் என, ஸ்ரீ ராமச்சந்திர மிஷன் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்காக, இவ்வமைப்பின் திருப்பூர் பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் விஸ்வநாதன், மாரப்பன், சுந்தரேசன் - ஆகியோர், பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமியை நேற்று சந்தித்து, இதனை தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை