மானியம் பெற, 120 விவசாயிகள் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானியம் பெற, 120 விவசாயிகள் மனு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அவிநாசி: அவிநாசியில், அரசின் மானிய உதவியை பெற, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று பெற, 120 விவசாயிகள் விண்ணப்பம் வழங்கியுள்ளனர்.தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், மானியத்தில் சொட்டு நீர் பாசன உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதில், சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியத்திலும், சொட்டு நீர் பாசன உபகரணம் வழங்கப்பட உள்ளன.சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று வழங்கும் முகாம், கடந்த இரு நாளாக, அவிநாசி தாலுக்கா அலுவலகத்தில் நடந்தது. அவிநாசி வட்டத்தில், இரு நாள் நடந்த முகாமில், 120 பேர் சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று பெற விண்ணப்பித்தனர்.இவ்விண்ணப்பங்களுக்கு தோட்டக்கலை துறையினர் வழங்கும் பரிந்துரை அடிப்படையில், வருவாய்த்துறையினர், சான்று வழங்கி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை