மாவட்ட குடும்ப நல குழு உறுப்பினர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட குடும்ப நல குழு உறுப்பினர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின், குடும்ப நலக்குழு உறுப்பினராகப் பணியாற்ற தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் அல்லி வெளியிட்ட அறிக்கை:சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி, திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவும், அதன் கீழ் குடும்ப நலக் கமிட்டியும் இயங்கி வருகிறது. இதில் தற்போது காலியாக உள்ள ஒரு பெண் உறுப்பினர் பதவியிடத்துக்கு பின் வரும் தகுதியுள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. சமூக சேவகர் அல்லது சட்ட விழிப்புணர்வு குழுவில் குறைந்த பட்சம் இரண்டாண்டு பணியாற்றிய அனுபவம். குடும்ப நல விவகாரங்களில் ஆலோ சகராக குறைந்த பட்சம் இரண்டாண்டு பணியாற்றியவராக இருக்க வேண்டும். சைக்காலஜி, சோசியாலஜி அல்லது சட்டப் படிப்பில் பட்டம் பெற்ற, இல்லத்தரசி அல்லது பணிக்குச் செல்லும், சமூகப் பணியில் ஆர்வம் உள்ளவர் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் உறுப்பினர்க்கு ஒரு அமர்வுக்கு 500 ரூபாய் மதிப்பூதியமாக வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளோர் வரும் 18 ம் தேதிக்குள், உரிய விண்ணப்ப படிவத்தில், வேண்டுகோள் கடிதம் ஆகியவற்றுடன், 'தலைவர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாவட்ட கோர்ட் வளாகம், லட்சுமி நகர், திருப்பூர், 2' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மாதிரி விண்ணப்பம் மற்றும் விவரங்களை மாவட்ட கோர்ட் இணைய தளம் www.ecourts.gov.in/tn/tirupur என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை