நிறம் மாறியதால் இல்லை விலை விரக்தியில் மா விவசாயிகள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிறம் மாறியதால் இல்லை விலை விரக்தியில் மா விவசாயிகள்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராஜபாளையம், பருவம் தவறிய மழையால் மா பழங்களில் நிறம் மாறியதால், விலையின்றி விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.ராஜபாளையம் மற்றும் சேத்துார் சுற்றுப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பகுதிகளில் மா மரங்கள் அதிகளவில் உள்ளன. பூ பூத்த நேரத்தில் பருவம் தவறி மழை பெய்தது. இதனால் காய்களில் நிறம் மாறியது. இதை காரணம் காட்டி வியாபாரிகள் விலை குறைவாக வாங்கினர். மிகவும் கருப்பு நிறம் படிந்த காய்களை கிலோ ரூ. 5 வரை கேட்கின்றனர். இவற்றை சில்லரை வியாபாரிகள் 20க்கு விற்பனை செய்கின்றனர். போதிய விளைச்சல் இல்லாததுடன், விலையும் குறைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சுந்தர்ராஜபுரம் விவசாயி பேச்சியப்பன்,'' தொடர் மழையால் பழங்களின் காம்பு பகுதிகளில் நீர் வடிந்து கருப்பு நிறமாக 'சாரை' என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுவை மாறாது. இருந்தாலும் வியாபாரிகள் கிலோ ரூ. 5க்கு கேட்கின்றனர். குத்தகைக்கு எடுத்தவர்களும், விவசாயிகளும் விரக்தியில் உள்ளனர்,''என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை