'எதிர்பார்த்த அறிவிப்பு வந்தது' தொழில் துறையினர் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'எதிர்பார்த்த அறிவிப்பு வந்தது' தொழில் துறையினர் மகிழ்ச்சி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்பூர்: கடந்த 2017, ஜூலை மாதம் முதலான, உள்ளீட்டு வரியை திரும்ப பெறலாம் என்கிற அறிவிப்பு, திருப்பூர் சாய ஆலை துறையினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.இது குறித்து சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:ஜி.எஸ்.டி., வரி அமலுக்கு வந்தபோது, ஆடை உற்பத்தி சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கான வரி 18 சதவீதம் விதிக்கப்பட்டது. தொழில் துறையினரின் தொடர் கோரிக்கையால், 12 சதவீதமாக குறைக்கப்பட்டது.மூலப்பொருட்கள் வாங்கும்போது செலுத்தும் வரி, சாய கட்டணத்தின்போது வசூலிக்கப்படும் வரியைவிட அதிகமாக உள்ளது. திரும்ப பெற முடியாத இந்த உபரி வரியை, ஜாப் ஒர்க் நிறுவனங்கள் திரும்ப பெற்று கொள்ளலாம்.சாய ஆலை சங்க கோரிக்கைக்குப்பின், மத்திய அரசு ஒரு திருத்தப்பட்ட அறிவிப்பு வெளியிட்டது; அதில், சாய ஆலைகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் அதிகப்படியான உள்ளீட்டு வரியை, கடந்த ஏப்., 18ம் தேதி முதல் திரும்ப பெற்று கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால், 2017 ஜூலை முதல் கடந்த ஏப்., 18ம் தேதிக்கு முந்தைய காலத்துக்கான உள்ளீட்டு வரியை திரும்ப பெறமுடியாத சூழல் உருவானது.டில்லி சென்று, மத்திய மறைமுக வரி மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகளை சந்தித்து, பின் தேதியிட்டு உள்ளீட்டு வரியை திரும்ப பெறுவதற்கான அறிவிப்பு வெளியிட கோரிக்கை வைத்தோம். கோரிக்கையை ஏற்று, சாய ஆலைகள் மற்றும் பொது சுத்திகரிப்பு மையங்கள், கடந்த 2017, ஜூலை முதலான, உள்ளீட்டு வரியை திரும்ப பெறலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு, சாய ஆலை துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை