இரு மாதமாக 9 அடி நீருடன் காட்சி சமநிலையில் ஆனைகுட்டம் அணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரு மாதமாக 9 அடி நீருடன் காட்சி சமநிலையில் ஆனைகுட்டம் அணை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகாசி, விருதுநகர் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆனைகுட்டம் அணையின் நீர்மட்டம் ஒரே சமநிலையில் தொடர்கிறது.விருதுநகர் நகராட்சி மக்களுக்குஆனைகுட்டம் அணையில் இருந்து உரைகிணறுகள் மூலம் 24 லட்சம் லிட்டர் தினமும் எடுக்கப்பட்டுகுடிநீர் சப்ளை நடக்கிறது. மேற்குதொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரே அர்ஜூனா நதி வழியாக அணைக்கு வருகிறது. 21 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் பாசன நேரத்தில் அருகில் உள்ள கண்மாய்கள் சென்று திருத்தங்கல், கன்னிச்சேரி, சாத்துார் பகுதி விவசாய நிலத்திற்கும் பயன்படுகிறது. இந்த நீரை கொண்டு 1000 முதல் 4500 எக்டேரில் விவசாயம் நடக்கிறது. இந்தாண்டு கோடை மழையால் அணையின் இருப்பு நீர் வற்றாமல் உள்ளது. குற்றாலத்தில் கனமழை பெய்வதால் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துாரில் ஒரு சில நாட்கள் மழை பெய்தது. இப்பகுதி அணைகளில் இருந்து வெளியேறும் நீர் ஒவ்வொரு கண்மாயாக நிறைந்து அணைக்கு வருவது வழக்கம். 'மலையில் மழைகுறைவால் அணைக்கு நீர் வரத்து இல்லை. இதனால் கடந்தமாதம் முதல் அணையின் இருப்பு நீர் 9 அடியாக உள்ளது.மழை தொடர்ந்தால் அணையின் நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளதாக,' பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை