நெருக்கடியில் பஸ் ஸ்டாண்ட் தபால் அலுவலகம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெருக்கடியில் பஸ் ஸ்டாண்ட் தபால் அலுவலகம்

Updated : ஜூன் 15, 2018 | Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

விருதுநகர், விருதுநகர் பழையபஸ்ஸ்டாண்டில் நெருக்கடியில் உள்ள தபால் அலுவலகத்தை அகற்றி, தேசபந்து மைதான தபால் அலுவலகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.தபால் அலுவலகங்களை பொறுத்தவரை ரூரல் பகுதியில் மூன்று கி.மீ., நகர் பகுதியில் இரு கி.மீ., இடைவெளியில் இருக்கவேண்டும். ஆனால் விருதுநகரில் பழையபஸ் ஸ்டாண்டில் வசதி இல்லாத நெருக்கடியில் ஒரு தபால் அலுவலகம், இதனருகே 500அடியில் தேசபந்து மைதானத்தில் மற்றொரு தபால் அலுவலகம் செயல்படுகின்றன.விதிமீறி அமைக்கப்பட்டுள்ள பஸ்ஸ்டாண்ட் தபால் அலுவலகம் அருகே ஆக்கிரமிப்புகளும் அதிகம். வசதிகளும் குறைவு. இங்கு பகலிலும் மின்விளக்குகள் எரியவேண்டும். தாழ்ந்த தரைதளம் என பிரச்னைகள் அதிகம் உள்ளன. இந்த தபால் அலுவலகம் நகராட்சி வளாகத்தில் வாடகை கட்டடத்தில் செயல்படுவதால் மேம்பாட்டு பணிகள் நடக்கவும் இடையூறாக உள்ளது. இதை இங்கிருந்து அகற்றி தேசபந்து மைதான தபால் அலுவலகத்துடன் இணைத்து, வசதிகளை மேம்படுத்தினால் வாடிக்கையாளர்களும் பயன் பெறுவர். இதற்கு தபால் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேம்படுத்த வழியில்லைபழைய பஸ்ஸ்டாண்டில் உள்ள தபால்அலுவலகம் இருப்பதே தெரியவில்லை. கொரியர், கிராமிய தபால் அலுவலகம் வந்த பின், பஸ்ஸ்டாண்ட் தபால் அலுவலக செயல்பாடு குறைந்து உள்ளது. தகவல் தொடர்பு வளர்ந்த நிலையில் கட்டமைப்பு வசதிகளை பெருக்கவேண்டிய அவசியம் நிர்வாகத்திற்கு உள்ளது. இது ,பஸ்ஸ்டாண்ட் தபால் அலுவலகத்திற்கு கிடைப்பதில் சிரமம் உள்ளது.இதை இங்கிருந்து மாற்றலாம்.- விக்னேஷ், கூல்டிரிங்ஸ் கடை, விருதுநகர்.


ஆக்கிரமிப்புகளால் அவதிதேசபந்து மைதானத்தில் தபால்அலுவலகம் சுற்றி உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால் சேமிப்பு, வைப்பு நிதி போன்றவற்றிற்கு வரும் வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர்.ஆக்கிரமிப்பை அகற்றி இந்த அலுவலகத்தில் மேம்பாட்டு பணிகளை செய்தால் வாடிக்கையாளர்கள் அதிகம் வந்துசெல்வர். ஆக்கிரமிப்பு கடைகளுக்கு மீன்மார்க்கெட் அருகே இடம் கொடுக்கலாம் . இதன் மீது உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். மீறுபவர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.- நாகேந்திரன், நகர் நல அமைப்பு, விருதுநகர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை