தடகள வீரர் தேர்வு போட்டி அக்கறை காட்டாத ஆசிரியர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடகள வீரர் தேர்வு போட்டி அக்கறை காட்டாத ஆசிரியர்கள்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: மாவட்ட அளவிலான தடகள வீரர் தேர்வு போட்டியில், அரசு பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் அக்கறை காட்டவில்லை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தடகள போட்டியில் திறமை நிரூபிக்கும் மாணவ, மாணவியரை தேர்வு செய்து, மாதம், 25 நாட்கள் வீதம், மொத்தம், 150 நாட்கள் தொடர் பயிற்சியளிக்கிறது.நடப்பாண்டுக்கான தடகள வீரர் தேர்வு சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் கடந்த, 12ல் நடந்தது. மாவட்டத்தில், 175க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இருந்தும்கூட, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் பங்கேற்றனர். இதற்காக, பள்ளி விளையாட்டு ஆசிரியர்களும் ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை.இது குறித்து, மாவட்ட விளையாட்டு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே மெயில் அனுப்புகிறோம். போனிலும், தொடர்பு கொண்டு அழைப்பு விடுக்கப்படுகிறது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வமுடன் உள்ளனர். ஆனால், விளையாட்டு ஆசிரியர்கள் முன்வந்து மாணவர்களை அழைத்து வருவதில்லை. இதனால், பங்கேற்கும் வாய்ப்பை மாணவர் இழக்கின்றனர்,' என்றனர்.தடகள தேர்வு போட்டியில், ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த, ஆறு மாணவியர் மட்டும் தேர்வாகியுள்ளனர். அதேநேரம், ஒரு மாநகராட்சி, அரசு பள்ளி மாணவர் கூட தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X