சாத்தூரில் மூடிக்கிடக்கும் கழிப்பறைகள்: மக்கள் அவதி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாத்தூரில் மூடிக்கிடக்கும் கழிப்பறைகள்: மக்கள் அவதி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சாத்துார், சாத்துார் வடக்குரதவீதியில் காளியம்மன் கோயில் எதிரிலும், முனிசிபல் காலனி அருகிலும் பூட்டிக்கிடக்கும் கழிப்பறைகளால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.சாத்துார் காய்கறி மார்க்கெட்டிற்கு கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். போக்குவரத்தும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ள பகுதியில் பொதுமக்கள் தங்கள் இயற்கை உபாதையை கழிக்க போதுமான வசதியில்லை. வடக்குரதவீதியில் காளியம்மன் கோயில் முன்பு இருந்த கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர். சேதமடைந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூட்டப்பட்டது. இதே போன்று முனிசிபல்காலனியில் உள்ள கழிப்பறையும் பராமரிப்புபணிக்காக பூட்டப்பட்டது. இரு கழிப்பறைகள் பூட்டி பல மாதங்களாவதால் பொதுமக்கள் திறந்த வெளியை நாடும் நிலை உள்ளது. சிவன் கோயில் தெப்பக்குளம், வடக்குரதவீதியில் உள்ள காலியிடத்தையும் திறந்த வெளிக்கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரக்கேடும் தொற்று நோய்பரவும் அபாயம் உள்ளது. செயல்படாமல் உள்ள கழிப்பறைகளை சீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை