கனடா நாட்டு ஆடை கண்காட்சிக்கு அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கனடா நாட்டு ஆடை கண்காட்சிக்கு அழைப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: கனடாவில் நடைபெற உள்ள, ஆயத்த ஆடை கண்காட்சியில் பங்கேற்க, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) அழைப்பு விடுத்துள்ளது.திருப்பூர் ஏ.இ.பி.சி., துணை இயக்குனர் ஈஸ்வரசுந்தர் அறிக்கை:கனடா நாட்டு ஆடை வர்த்தக சந்தையில், நமது நாட்டு ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்த நாட்டுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க, ஏ.இ.பி.சி., தொடர்ந்து முயற்சித்து வருகிறது.'அப்பேரல் டெக்ஸ்டைல் சோர்ஷிங் கனடா கண்காட்சி, டொரோன்டோ நகரில் உள்ள, சர்வதேச கண்காட்சி அரங்கில், வரும் ஆகஸ்ட் 20ல் துவங்கி 22ம் தேதி வரை, தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது.இந்த கண்காட்சியில், 20 நாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி துறையினர், ஆடைகளை காட்சிப்படுத்துகின்றனர்; கனடா மற்றும் அண்டை நாடுகளை சேர்ந்த, வர்த்தகர்கள், வர்த்தக முகமை நிறுவனத்தினர், 3 ஆயிரம் பேர், கண்காட்சியை பார்வையிட்டு வர்த்தக விசாரணை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில், நம் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க, ஏ.இ.பி.சி., ஏற்பாடு செய்துள்ளது. ஆடை உற்பத்தி துறையினர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கனடாவுக்கான ஏற்றுமதியை அதிகரிக்கவேண்டும். விவரங்களுக்கு, 0421---2232634 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X