போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருப்பூர்: திருப்பூர் குமரன் ரோட்டில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில், 108 ஆம்புலன்ஸ் சிக்கியதால், நோயாளி அவஸ்தைப்பட்டார்.திருப்பூரில், உள்ள அவிநாசி ரோடு, பி.என்., ரோடு, பல்லடம் ரோடு, காங்கயம் ரோடு உட்பட பிரதான ரோடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையை தீர்க்க போக்குவரத்து போலீசார், ஆயுதப்படை போலீசார் முக்கிய இடங்களில் பணியமர்த்தப்பட்டு, வாகனங்களில் ரோந்து மேற்கொண்டு கண்காணித்தனர்.கடந்த சில வாரங்களாகவே, சில இடங்களில் மட்டுமே போக்குவரத்து சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மற்ற இடங்களில் இருப்பதில்லை; இதனால், போக்குவரத்து நெரிசல் மீண்டும் தலை துாக்கியுள்ளது.இந்நிலையில், நேற்று காலை முதல் மதியம் வரை குமரன் ரோடு, பி.என்., ரோடு உள்ளிட்ட பிரதான ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் எறும்பு போல் ஊர்ந்து சென்றது. குமரன் ரோட்டை கடந்து செல்வதற்குள் வாகன ஓட்டிகள் 'திக்குமுக்காடி' போயினர். மதியம், 1:00 மணியளவில் குமரன் ரோட்டில் சென்ற, 108 ஆம்புலன்ஸ், இந்த வாகன நெரிசலில் சிக்கி, அங்கிருந்து பூ மார்க்கெட் வீதி, அரிசிக்கடை வீதியை கடந்து செல்வதற்குள் ஆம்புலன்ஸ் டிரைவர் சிரமப்பட்டார்.இதனால், ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி அவஸ்தைப்பட்டார். தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய கமிஷனர், போக்குவரத்து நெரிசல் பிரச்னையில் தலையிட்டு, உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X