அமைச்சரவை தீர்மானம்: ஸ்டாலின் வலியுறுத்தல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அமைச்சரவை தீர்மானம்
ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை : ''துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலையை மூட, அமைச்சரவையை கூட்டி, தீர்மானம் போட வேண்டும்,'' என, அரசுக்கு, எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

அமைச்சரவை,தீர்மானம்,D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்,வலியுறுத்தல்


சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், ஸ்டாலின் எழுந்து பேசினார். அப்போது, ''துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட, அரசாணை பிறப்பித்துள்ளீர்கள். ''இது தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், சில கருத்துகளை தெரிவித்து உள்ளனர்'' என்றார்.

சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு, ''மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், சில கருத்துகளை தெரிவித்துள்ளனர். அரசு, 22ம் தேதிக்குள்

தகவல் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்துள்ளனர். ''எனவே, இதுகுறித்து, சபையில் விவாதிக்கக் கூடாது. அதற்கு அனுமதிக்க மாட்டேன்,'' என்றார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ''ஸ்டெர்லைட் ஆலையை, உளப்பூர்வமாக மூட நினைத்தால், அமைச்சரவையை கூட்டி தீர்மானம் போட வேண்டும் அல்லது சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,'' என வலியுறுத்தினார்.

அப்போது, சபாநாயகர், ஸ்டாலின் கூறிய வார்த்தை ஒன்றை, சபைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். இதற்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ''நீதிபதிகள் குறிப்பிட்டதாகக் கூறி, ஸ்டாலின் கூறிய ஒரு வார்த்தை மட்டும் நீக்கப்பட்டுள்ளது. மற்றவை இருக்கும்,'' என, சபாநாயகர் அறிவித்தார்.

'நீட் நுழைவுத் தேர்வில், தோல்வி அடைந்ததால், தற்கொலை செய்து கொண்ட, திருச்சி மாணவி, சுபஸ்ரீ குடும்பத்திற்கு, நிதியுதவி அளிக்க வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

சட்டசபையில், அவர் பேசியதாவது: 'நீட்' தேர்வில் தோல்வி அடைந்ததால், தற்கொலை செய்த, அரியலுார் மாணவி, அனிதா, விழுப்புரம் மாணவி, பிரதிபா ஆகியோர் குடும்பத்திற்கு, அரசு சார்பில், நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த, சுபஸ்ரீ குடும்பத்திற்கு, இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை.

தி.மு.க., சார்பில், எங்கள் கட்சி மாவட்ட செயலர் நேரு, அவரது குடும்பத்தினரை சந்தித்து, இரண்டு லட்சம் ரூபாய் நிதி வழங்கி, ஆறுதல் கூறினார். அரசு சார்பில், நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பதை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
15-ஜூன்-201819:56:16 IST Report Abuse

Gopalakrishnanதிருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா ...உங்கப்பன் கொள்ளைக்காரன் கொள்ளை அடிச்சி கொல்லைப்புறமா பொதச்சு வச்சது எங்கடா ?திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா

Rate this:
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
15-ஜூன்-201819:51:28 IST Report Abuse

Gopalakrishnanஆட்சியில் இல்லாததால் துட்டு புரள மாட்டேன் என்கிறது ...துட்டு புரளறாப்புல எங்கள் 10 கப்பல் மாலு 12 கப்பல் திருடி வாங்கினார். ஆனால் இப்பொது இருக்கும் மத்திய அரசின் கிடுக்கு பிடியால் கப்பல் கவுந்து போச்சு ...என்னத்த சொல்ல?

Rate this:
Baskar - Paris,பிரான்ஸ்
15-ஜூன்-201815:52:38 IST Report Abuse

Baskarபந்தா தலைவருக்கு அடிக்கடி பல்பு வாங்குவதே வேலையாய் போய் விட்டது.

Rate this:
Krishna Prasad - Chennai,இந்தியா
15-ஜூன்-201811:41:03 IST Report Abuse

Krishna Prasadசொன்னதையே திருப்பி திருப்பி சொல்லறே

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
15-ஜூன்-201810:25:27 IST Report Abuse

Visu Iyerஇன்னமுமா அரசை கலைக்கவில்லை

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜூன்-201809:16:43 IST Report Abuse

Srinivasan Kannaiyaஏம்ப்பா உனக்கே இது சரியா தெரியுதா... நீங்கள் தானே ஆயிரத்து தொள்ளாயிரத்து ஏழில் ஆண்டீங்க...? அப்போ தவறா தெரியாதது இப்போ தெரியுதா... நீங்க சின்ன புள்ளை...எதற்கும் உங்க தோப்பனாரை கேட்டு சொல்லுங்க...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-201807:09:11 IST Report Abuse

Kasimani Baskaranநாட்டின் காப்பர் உற்பத்தியில் 40% த்தை சரிக்கட்டியது ஸ்டெர்லைட்... 400 ரூபாயாக இருந்த காப்பர் என்று 600 ரூபாயாக உயர்ந்துள்ளதால்... மின்சார மோட்டார் செய்யும் பல கோவை தொழில்கள் நஷ்டத்தில் ஓட வாய்ப்பு இருக்கிறதாம்... இதை மூடியது தமிழக தொழில்களை சீரழிக்கும் செயல்... புத்தியுள்ளவர்கள் ஆண்டால் தமிழகம் வளரும்... திராவிடர்கள் தங்கள் பைகளை நிரப்புவதில் கவனம் செலுத்துவதால் ஒன்றுமே செய்ய முடியாது...

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
15-ஜூன்-201807:00:20 IST Report Abuse

தேச நேசன் இன்னும் அகர்வாலிடம் டீல் படியலய்யா? ஸ்டெர்லைட்டுக்கு கூவவேண்டாம்

Rate this:
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
15-ஜூன்-201804:12:19 IST Report Abuse

Dr Kannan''ஸ்டெர்லைட் ஆலையை, உளப்பூர்வமாக மூட நினைத்தால், அமைச்சரவையை கூட்டி தீர்மானம் போட வேண்டும் அல்லது சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'' என்று நீதி மன்றமும், வைகோ மற்றும் ஸ்டாலின் அறிவுறுத்துவது வரவேற்கத்தக்கதும் ஆக்கபூர்வமானதுமாகும் . அனைத்து கட்சிகளும் தமிழ் மக்களின் உணர்வை மதித்து மக்களின் நலம் மற்றும் வல்லவதாரத்திற்கு ஆபத்தான ஸ்டெர்லிட் ஆலையை மூடுவதற்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும். நேர்மையான ஆளுமைக்கும் அரசாட்சிக்கும் வள்ளுவர் திருக்குறள் கூறியுள்ளது: Kural: 548: The Ruler who fails to govern well would be working towards his own dismissal. Kural: 551: A Government which is unjust is worse than the cruelty of murderers. Kural: 552: A Ruler who demands money and practices extortion and corruption is like an armed highway robber demanding money. Kural: 553: Good Governance requires day to day dispensation of justice and day to day elimination of wrongs. The Administrator who fails in this is leading the country to ruin day by day. Kural 554: The Government which does not prevent abuse of power would face economic disaster and would ultimately lose its people as well. Kural: 555: The misuse and abuse of powers in Government makes the people feel hapless. When people stand de-motivated, they cannot contribute to the promotion of economy. The result is economic down fall of the country. Kural 556: A Government shines by Good Governance. And the absence of Good Governance makes the Government lose its shine and endurance. மக்களின் பிரதிநிதிகள் மக்களுக்காக பணிபுரிவார்கள் என்று நம்புவோம்

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
15-ஜூன்-201807:01:31 IST Report Abuse

தேச நேசன் ஐ நா சபை பக்கத்திலேயேதானே இருக்கறீங்க ? அப்டியே ஒரு நடை போய் அங்கும் தீர்மானம் போடுங்க...

Rate this:
Kabilan E - Chennai,இந்தியா
15-ஜூன்-201803:39:35 IST Report Abuse

Kabilan Eகொள்ளை அடித்து வைத்திருக்கிற மக்கள் பணத்தை அள்ளி கொடுக்கலாமே... நமக்கு அடிச்சி புடுங்கி தானே பழக்கம்...

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement