மாணவியருக்கு சான்று வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவியருக்கு சான்று வழங்கல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்--டீ கல்லுாரி, கல்விசார் மாணவர் பரிமாற்றத்துக்காக, ஜெர்மனி நாட்டு நெர்ன்பெர்க் கல்லுாரி யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி, இரு கல்லுாரி இடையே, மாணவர் பரிமாற்றம் நடந்துவருகிறது.கடந்த மே மாதம் நிப்ட்-டீ மாணவியர் ஆறுபேர், கடந்த மே 2ம் தேதி ஜெர்மனி சென்றனர். அங்கு, நுகர்வோர் விருப்பம் அறிந்து ஆடை தயாரிப்பது. புதுவகை டிசைன் உருவாக்கம், நுகர்வோர் விரும்பும் பொருளை தயாரிக்கும் நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.திருப்பூர் மாணவியர். 16 நாட்கள் ஜெர்மனியில் கல்வி கற்று திரும்பிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, நிப்ட்--டீ கல்லுாரியில் நேற்று நடந்தது. கல்லுாரி தலைவர் முருகானந்தன் தலைமை வகித்தார். அகாடமி கமிட்டி தலைவர் சீனிவாசன், கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன், துணை முதல்வர் தயாளராஜன், மனிதவள மேம்பாட்டு துறை தலைவர் மோகன்குமார் பங்கேற்று, மாணவியருக்கு, சான்றிதழ் வழங்கினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை