பயிர் காப்பீடு தொகையில் வேறுபாடு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு தொகையில் வேறுபாடு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சாத்துார், சாத்துார் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ. மங்களராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தாசில்தார் சாந்தி முன்னிலை வகித்தார்.விவசாயிகள் விவாதம்:தனுஷ்கோடிராமசாமி (விவசாயி): 2016-17 ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு கிடைக்க உதவிய கலெக்டர் அதிகாரிகளுக்கு நன்றி.தமிழ்செல்வன் (விவசாயி): பயிர் காப்பீடு தொகை ஒரு விவசாயிக்கு அதிகமாகவும், ஒரு விவசாயிக்கு குறைவாக வழங்கப்பட்டுள்ளது ஏன்ஆர்.டி.ஓ.,: இறவை சாகுபடியில் கிடைத்த விளைச்சலை கணக்கெடுத்து காப்பீடு தொகை வழங்குகிறது.இதனால் தான் வித்தியாசமாக உள்ளது. சாத்துார் வறட்சிப்பகுதியாக அறிவிக்கப்பட்டு, பண்ணைக்குட்டை அமைக்க முழுமானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளை அணுகி பயன்பெறலாம்.சுப்புராஜ் (விவசாயி): வன விலங்குகள் பயிர்சேதம் இழப்பீடுக்கு விண்ணப்பித்தும் கண்டு கொள்ளவில்லை.ஆர்.டி.ஓ.: எனது பார்வைக்கு மனு ஏதும் வரவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை