திடக்கழிவு திட்டத்தில் குப்பை சேகரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திடக்கழிவு திட்டத்தில் குப்பை சேகரம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகாசி, சிவகாசி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் குப்பை சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சிவகாசி நகராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்தாண்டு குப்பையை தரம்பிரித்து உரம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. குப்பையை சேகரிக்கவும் நகராட்சி திட்டங்கள் வகுத்துள்ளனநகராட்சி ஆணையாளர் முகமது சிராஜ் கூறுகையில், '' மக்கள் வசிக்கும் மற்றும் கூடும் இடங்களில் மக்காத, மக்கும் குப்பை சேகரம் செய்யப்படும். உரக்குழியில் போடப்பட்டு உரம் தயாரிக்கப்படும்.மீன், கோழி, ஆடு போன்ற இறைச்சிக்கடை நடத்துபவர்கள், கழிவுகளை, தெருக்கள், திறந்தவெளியிடங்கள், கழிவுநீர் கால்வாய்களில் கொட்டக் கூடாது. கசிவு ஏற்படாத வகையில் பொட்டலங்களாக்கி நகராட்சி வாகனத்தில் ஒப்படைக்க வேண்டும். குப்பை அகற்ற சேவை வரி வசூலிக்கப்படுவதால் நகரை துாய்மை ஆக்க நடவடிக்கை எடுத்து வரு கிறோம்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை