ஊரெங்கும் குப்பை; கொசுக்கள் தாராளம் விரக்தியில் வீரசோழன் மக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரெங்கும் குப்பை; கொசுக்கள் தாராளம் விரக்தியில் வீரசோழன் மக்கள்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

நரிக்குடி, நரிக்குடி வீரசோழன் ஊராட்சியில்2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.அடிப்படை வசதி கள் முற்றிலும் மோசமாக உள்ளது. எங்கு பார்த்தாலும், குப்பை , பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுவதால் சுகாதாரம் என்ன விலை என கேட்கும் அளவிற்கு உள்ளது.பஸ் ஸ்டாண்டிலும் போதிய வசதிகள் கிடையாது. மழை, வெயிலுக்கு பயணிகள் சிரமப்படுகின்றனர். ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் உள்ளது. போதிய தண்ணீர் சப்ளை இல்லாததால் விலைக்கு வாங்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு சிரமம்எங்கு பார்த்தாலும் குப்பை நிறைந்து கிடக்கின்றன. பிளாஸ்டிக் கழிவுகளை ஆங்காங்கே கொட்டுவதால் சுகாதாரகேடு ஏற்படும் வாய்ப்புள்ளது. போதிய கழிப்பறை இல்லை. வெளியூரிலிருந்து வரும் பெண்கள் சிரமப்படுகின்றனர்.-அயூப்கான், சமூக ஆர்வலர்பகலிலே கொசுக்கள்கூடுதல் தெரு விளக்குகள் இல்லை.வாறுகால் வசதி இல்லாததால் கழிவு நீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி துர்நாற்றத்துக்கு வழி தருகிறது. பகலிலே கொசுக்கள் கடிக்கும் அவல நிலை உள்ளது. அடிப்படை வசதி என்பது மிகவும் மோசமாக இருப்பதால் தேவையான வசதிகளை செய்ய வேண்டும்.-குமார், விவசாயி.



வசதிகள் இல்லையே
மாவட்டத்தின் கடைக்கோடியில் இருக்கும் பெரிய ஊர். சுற்றி உள்ள கிராம மக்களின்தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக உள்ளது. வந்து செல்லும் மக்களுக்கு தேவையானஅடிப்படை வசதிகள் இல்லை என்பது வேதனையான விஷயம்
-கருப்பையா, கூலி தொழிலாளி.



குடிநீருக்காக அலைச்சல்
தண்ணீர் சப்ளை போதிய அளவிற்கு இல்லை. இருக்கிற ஒரு சில தரைதளதொட்டிகளும் செயல்படாமல் உள்ளது. நீண்ட துாரம் சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டிய நிலை உள்ளது. கூடுதல் தொட்டிகள் அமைத்து, தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,-வெள்ளத்துரை, விவசாயி.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X