மழையால் கடல் மீன் வரத்து குறைவு ரூ. 50 முதல் 300 வரை விலை உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் கடல் மீன் வரத்து குறைவு ரூ. 50 முதல் 300 வரை விலை உயர்வு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: மழை மற்றும் மீன் பிடி தடை காலம் காரணமாக, வெளிமாநிலங்களிலிருந்து கடல் மீன்கள் வரத்து குறைந்ததால், விலை உயர்ந்துள்ளது.திருப்பூருக்கு, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களிலிருந்து, தினமும், 40 முதல் 60 டன் கடல் மீன்கள் வரத்து உள்ளது.தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் மற்றும் கேரளா, கர்நாடகாவில் கனமழை காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால், மீன் வரத்து குறைந்து, விலை கிலோவுக்கு, 50 முதல் 300 வரை உயர்ந்துள்ளது.கடந்த வாரம், கிலோ, 120 ரூபாயாக இருந்த மத்தி மீன், 150 ரூபாய், ஒரு கிலோ 900 ரூபாய் இருந்த வாவல் மீன், 1,100 ரூபாயாகவும், 900 ரூபாய் இருந்த வஞ்சிரம் மீன் விலை, 1,200 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், 400 ரூபாய் இருந்த ஒரு கிலோ நண்டு விலை, 500 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. விளா மீன், சங்கரா, சீலா, பாறை, இறால் என அனைத்து வகை மீன்கள் விலையும் உயர்ந்துள்ளது. மீன் வியாபாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் அமலில் இருந்த நிலையில், கேரளாவிலிருந்து மீன் வரத்து காணப்பட்டது. அங்கு கன மழை காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மழை காரணமாக மீன் பிடிப்பு பாதித்துள்ளது. இதனால், வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X