ரூ.36 கோடி கடன் வழங்க தொழில் முதலீட்டு கழகம் இலக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.36 கோடி கடன் வழங்க தொழில் முதலீட்டு கழகம் இலக்கு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்பூர்: தொழில் முதலீட்டு கழகத்தில் நடந்து வரும் சிறப்பு கடன் முகாமில், இதுவரை, 15 கோடி ரூபாய் அளவுக்கு கடன் கேட்டு தொழில் முனைவோர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (டிக்) திருப்பூர் கிளை சார்பில், சிறப்பு தொழில் கடன் விழா, குமரன் வணிக வளாகத்தில் உள்ள முதலீட்டு கழக அலுவலகத்தில், கடந்த 11ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி, காயத்ரி ஓட்டலில் நேற்று நடந்தது. கோவை மண்டல மேலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார்.'டிக்' நிர்வாக இயக்குனர் ஆர்த்தி பேசுகையில், ''தமிழகம் முழுவதும், 1.2 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்; இதுவரை, 15 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. 1,502 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. ''சிறு, குறு நிறுவனங்கள், தொழில் துறையின் முதுகெலும்பாக உள்ளன. தொழில்முனைவோர், கடன் பெறுவதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் தெரிவிக்கலாம்; சிக்கல்கள் தீர்த்து வைக்கப்படும்,'' என்றார்.திருப்பூர் கிளை மேலாளர் ராஜேந்திரன் பேசுகையில், ''திருப்பூர் 'டிக்' கிளையில், நடப்பு ஆண்டு, 36 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் தொழில்முனைவோர், வாங்கும் கடனை, முறையாக திருப்பி செலுத்தி விடுகின்றனர்; வராக்கடன் என்பதே இல்லை,'' என்றார்.முன்னதாக, 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி, 'சைமா' சங்க பொது செயலாளர் பொன்னுசாமி வாழ்த்தி பேசினர்.கடன் வழங்கும் முகாமில், மொத்தம், 15 கோடி ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. திட்ட நிர்வாக அலுவலர் பாண்டியன் நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை