8,550 யூனிட் ரத்த தானம் கலெக்டர் பெருமிதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

8,550 யூனிட் ரத்த தானம் கலெக்டர் பெருமிதம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: மாவட்டத்தில், கடந்தாண்டு, 8,550 யூனிட் ரத்தம் கொடையாக பெறப்பட்டுள்ளது, என கலெக்டர் தெரிவித்தார்.உலக ரத்த கொடையாளர்கள் தின விழா, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில், கலெக்டர் பழனிசாமி பேசியதாவது:ரத்த தானம் மற்றும் பாதுகாப்பான ரத்தம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உயிர் காக்க உன்னதமான பணியான ரத்த தானம் செய்யும் கொடையாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கொடையாளர் தினம் கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு சொட்டு ரத்தமும் துடிக்கிற உயிரை காப்பதாகும். மாவட்டத்தில், தாராபுரம், உடுமலை மற்றும் திருப்பூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரத்த வங்கி செயல்படுகிறது. பல்வேறு முகாம்கள், தன்னார்வலர்கள் மூலமாக, கடந்தாண்டு, 8,550 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது.ஆபத்தில் உள்ளவர்களுக்கு ரத்தம் அளிக்கும் வகையில், புதிதாக 'வாட்ஸ் அப்' குழு அமைக்கப்பட்டு, உடனடியாக ரத்தம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.விழாவில், ரத்த தானம் செய்த, 107 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி, இணை இயக்குனர் சோமசுந்தரம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் பிரியா விசுவாசம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை