மனைவியை துன்புறுத்திய கணவருக்கு ஜெயில்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை துன்புறுத்திய கணவருக்கு ஜெயில்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: மது போதையில் மனைவியை துன்புறுத்திய கணவருக்கு, சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.திருப்பூர், கரைத்தோட்டத்தை சேர்ந்தவர் ராஜா, 25. பனியன் நிறுவன தொழிலாளி. அவர் மனைவி கல்யாணி, 23. தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ராஜாவுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால், அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து போதையில், கல்யாணியை அடித்து உதைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.இதனால், கல்யாணி, குழந்தைகளுடன், தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். இந்நிலையில், 2012ல் அங்கு சென்ற ராஜா மது போதையில் கல்யாணியை அடித்து உதைத்து, மிரட்டல் விடுத்தார். இது குறித்து கல்யாணி அளித்த புகாரின் பேரில் தெற்கு போலீசார், ராஜாவை, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை, ஜே.எம். எண் 2 கோர்ட்டில், மாஜிஸ்திரேட் பழனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், ராஜாவுக்கு ஆறு மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனால், ராஜா, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை