உத்தரகண்டில் செல்லும்; கர்நாடகாவில் செல்லாது Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
உத்தரகண்டில் செல்லும்;
கர்நாடகாவில் செல்லாது

உத்தரகண்டில், ஒன்பது எம்.எல்.ஏ.,க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்; 'இந்த நீக்கம் செல்லும்' என, உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கின.

உத்தரகண்ட்,செல்லும்,கர்நாடகா,செல்லாது


மார்ச், 18, 2016: உத்தரகண்ட் சட்டசபையில், இடஒதுக்கீடு மசோதாவுக்கு, ஓட்டெடுப்பு நடத்தக் கோரி, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களுடன், காங்., அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள், ஒன்பது பேர் கோரிக்கை வைத்தனர். இதனால், சட்டசபையை, சபாநாயகர் ஒத்திவைத்தார்.

மார்ச், 19: 'பெரும்பான்மையை, மார்ச், 28க்குள் நிரூபிக்க வேண்டும்' என, முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு, கவர்னர் உத்தரவிட்டார்.

மார்ச், 20: அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்களுக்கு, சபாநாயகர், 'நோட்டீஸ்' அனுப்பினார்.

மார்ச், 24: சபாநாயகரின் நோட்டீசிற்கு தடை விதிக்கக் கோரிய, எம்.எல்.ஏ.,க்கள் மனுவை, உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மார்ச், 27: ஒன்பது எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டார்.

மார்ச், 28: ஜனாதிபதி ஆட்சி அமலானது.

மார்ச், 29: நம்பிக்கை ஓட்டெடுப்பை, மார்ச், 31ல் நடத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.மார்ச், 30: நம்பிக்கை ஓட்டெடுப்பை நிறுத்தக் கோரி, மத்திய அரசு மனு செய்ததால், ஓட்டெடுப்பு, ஏப்., 7க்கு தள்ளி வைக்கப்பட்டது.

ஏப்., 1: சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து, ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த வழக்கில், விசாரணை துவங்கியது.

ஏப்., 25: 'காங்., கட்சியிலேயே தொடர்கிறோம்; முதல்வரைத் தான் மாற்ற விரும்புகிறோம்' என, அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள், உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மே, 9: 'சபாநாயகரின் உத்தரவு செல்லும்' என, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மே, 11: உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

நவ., 14, 2017: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செல்லாது!


கர்நாடகாவில், எடியூரப்பா ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்ற, எம்.எல்.ஏ.,க்கள், 16 பேரின் பதவி பறிக்கப்பட்டது. இதில், 'சபாநாயகரின் உத்தரவு செல்லாது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அக்., 12, 2010: கர்நாடக சட்டசபையில், முதல்வர் எடியூரப்பா மீது, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. முன்னதாக,

Advertisement

இவர்கள், 16 பேரும், எடியூரப்பாவுக்கு அளித்து வந்த ஆதரவை, வாபஸ் பெறுவதாக, கவர்னரிடம் கடிதம் வழங்கினர். ஓட்டெடுப்பின் முன், 16 எம்.எல்.ஏ.,க்களின் பதவியை, சபாநாயகர் பறித்தார். இவர்களில், 11 பேர், பா.ஜ.,வினர்; ஐந்து பேர் சுயேச்சைகள். சபாநாயகரின் முடிவை எதிர்த்து, 16 எம்.எல்.ஏ.,க்களும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்

அக்., 29, 2010: வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தகுதிநீக்கம் செல்லும்' என, தீர்ப்பளித்தது. இதையடுத்து, 16 எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மே, 13, 2011: வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 'நம்பிக்கை ஓட்டெடுப்பில் முதல்வரின் வெற்றி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, சபாநாயகர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை, நீதியை கருத்தில் கொள்ளாமல், சபாநாயகர் எடுத்த முடிவை, இந்த நீதிமன்றம் ஏற்க மறுக்கிறது. எனவே, எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்கிறோம்' என, தீர்ப்பளித்தது.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - chennai,இந்தியா
15-ஜூன்-201813:37:04 IST Report Abuse

Rameshஎல்லாம் சரி தான். அயோக்கிய அரசியல்வாதிகள் சண்டை பெருசா இருக்கு. வக்கீல் நீபதிகள் தொழில் அமோகம்

Rate this:
Ananthakrishnan - Thanjavur,இந்தியா
15-ஜூன்-201812:28:22 IST Report Abuse

Ananthakrishnan முல்லா நஸீருத்தீன் கதை ஒன்று ஞாபகம் வருகிறது. முல்லா நீதிபதியாக இருக்கிறார். வாதியின் வழக்கறிஞர் அவரது தரப்பு வாதம் முடிந்தவுடன் முல்லா சொல்கிறார், "நீங்கள் சொல்வதுதான் சரி". பின்னர் பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தை முடிக்கிறார். அதற்கும் முல்லா "நீங்கள் சொல்வதுதான் சரி" என்கிறார். பின்னர் நீதிமன்ற தலைமை குமாஸ்தா மெதுவான குரலில் முல்லாவிடம் ' ஐயா, நீங்கள் இரண்டு தரப்பு வாதங்களையும் நன்றாகப் பரிசீலித்த பின்னரே உங்கள் தீர்ப்பை சொல்லவேண்டும்" என்கிறார். அதற்கும் முல்லா, "நீங்கள் சொல்வதுதான் சரி" என்கிறார். இப்போது இந்த கதை எதற்கு என்கிறீர்களா? இந்தக் கதை எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்பதற்குத்தான்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-201814:07:47 IST Report Abuse

Kasimani Baskaran..போல யார் மனத்தயும் புண்படுத்தாமல் கருத்து எழுதி சிறப்பாக செய்து இருக்கிறீர்கள்... பாராட்டுக்கள்.......

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜூன்-201821:30:51 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்அந்த கதையில், உண்மையில் எரிச்சலடைந்த மக்கள், "இப்படி தீர்ப்பு சொல்வதற்கு நீ கழுதை மேய்க்க போகலாம். அதுக்கு தான் லாயக்கு." என்று முல்லாவிடம் சொன்னார்களாம். அதற்கு முல்லா நஸீருத்தீன், "அதுவும் ரொம்ப சரி" என்று சொல்லிவிட்டு கழுதை மேய்க்க போயிட்டாராம்....

Rate this:
Ganapathy - Bangalore,இந்தியா
15-ஜூன்-201811:43:24 IST Report Abuse

Ganapathyஉத்ரகண்டிற்கும், கர்நாடகத்திற்கும் உள்ள வித்யாசத்தை இங்கே குறிப்பிடவில்லை . உத்ரகாண்டில் ஆளும்கட்சி உறுப்பினர்ககள் எதிர்கட்சியினருடன் " சேர்ந்து" , ஓட்டுஎடுப்பு நடத்தக்கோரினார் . கர்நாடகத்தில் அப்படி இல்லை .

Rate this:
Muthu - Bangalore,இந்தியா
15-ஜூன்-201810:55:20 IST Report Abuse

Muthuசேகர் அண்ணன்...பெயரை மாற்றினாலும்.. ஆளு கொஞ்சம் கூட மாறல.. நீங்க இல்லாட்டி எங்களுக்கு எது என்டேர்டைன்மென்ட்...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜூன்-201809:27:00 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇந்தியாவை பொறுத்தவரை நீதிக்கு பன்முகங்கள் உள்ளது...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜூன்-201809:25:48 IST Report Abuse

Srinivasan Kannaiyaநீதியில் இயற்க்கை செயற்கை என்று நீதிமன்றமே அறிவித்து விட்டது... இனி பேசி என்ன புண்ணியம்... நீதி தேவதை ஏற்கனவே கண் காதை கருப்புதுணியால் மூடி உள்ளாள்... இனியும் வாயையும் மூடி கொள்ளலாம்...

Rate this:
Rajan. - singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-201808:43:44 IST Report Abuse

Rajan. ஆளை சொல்லு தீர்ப்பு சொல்லுகிறேன்

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-ஜூன்-201806:47:17 IST Report Abuse

ஆரூர் ரங்கொலையும் குற்றம் கொலை முயற்சியும் குற்றமெனத்தான் சட்டம் சொல்கிறது ,சொந்தக் கட்சியின் ஆட்சியைக் கவிழ்ப்பது எவ்வளவு குற்றமோ அதே அளவு கவிழ்க்க திட்டம்போடுவதும் குற்றமே .( ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.மத்தேயு வாசகம் 5: 27-32) கவர்னருக்கு முதல்வரை மாற்றும் அதிகாரமே இல்லை எனத்தெரிந்தும் அவரிடம் முதல்வரை மாற்றச்சொல்வது அரசைக் கவிழ்க்கும் செயல்தான் .முதல்வர்தான் சட்டமன்த்தில் ஆளும் கட்சியின் தலைவர் அவரை தூக்கியடிக்க நினைப்பது ஆட்சியைக் கவிழ்க்கும் கட்சிமாறல் செயலே . கணவன் பிடிக்கவில்லையென்பதற்காக மாமனார் மாமியாரிடம் வேறு கணவனைத்தரக் கேட்பதுபோலுள்ளது .உட்கட்சி விவகாரங்களை வெளியார் துணியோடு தீர்க்கமுயல்வது அபத்தம் . சட்ட்டமன்றத்தில் எதிர்த்து ஓட்டுப்போட்டு கவிழ்த்து குதிரை பேரத்தில் காசுபார்க்க அலைபவர்கள் தண்டனை பெறாமல் போகக்கூடாது . இது OPS தரப்புக்கும் பொருந்தும்

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-ஜூன்-201800:24:12 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்104 மட்டும் கைலே வச்சிக்கிட்டு 112 காட்டுவோமுன்னு சொல்றது எந்த வகை ச்சாரம்?...

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-ஜூன்-201800:24:58 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்// சட்ட்டமன்றத்தில் எதிர்த்து ஓட்டுப்போட்டு கவிழ்த்து குதிரை பேரத்தில் காசுபார்க்க அலைபவர்கள் தண்டனை பெறாமல் போகக்கூடாது . // பாருய்யா, இவன் இவ்வளவு நல்லவன்னு நமக்கு தெரியுமே போச்சே.....

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
15-ஜூன்-201806:08:12 IST Report Abuse

Darmavanஇதன் மூலம் ஒன்று தெளிவாகிறது. உச்ச நீதி மன்ற நீதிபதிகள் காங்கிரஸ் ஏஜெண்டுகளாக இருக்கின்றனர் என்பதே. தீர்ப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாக அமைகிறது.

Rate this:
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
15-ஜூன்-201802:18:53 IST Report Abuse

Palanisamy Sekarஆளும்தரப்பினர் என்றைக்கு நீதிமன்றத்தில் நுழைய ஆரம்பித்தார்களோ.. அன்றைக்கே நீதிக்கு சனிபிடித்துவிட்டது. நாட்டின் சாமான்யனுக்கு பாதுகாப்பே உச்ச நீதிமன்றம்தான் இறுதியானது. அதில்கூட இவர்கள் விளையாட ஆரம்பித்தது நாட்டை பிடித்த பீடையானது. நீதிக்கு விலை பேசி தீர்ப்பை வாங்கியதற்கு வெட்கப்படாதவர்களும் சரி..கொடுக்கப்பட்ட நீதிக்கு கிடைத்த சன்மானமாக கவர்னர் பதவி வகிப்போரும் சரி கூச்சப்படாத நிலையில் மாநிலத்துக்கு ஓர் நீதி என்றும்..மாவட்டங்களுக்கு ஒரு நீதி என்றும்..ஆளும் கட்சிக்கு சாதகமான நீதி என்றும்..தொடருகின்ற போக்குதான் இப்படிப்பட்ட தீர்ப்புக்கு அடிப்படை காரணம். ஆசை வெட்கம் அறியாது என்பார்கள்.. நீதிக்கோ இங்கே பதவி சுகம் காண்பித்து பெறுகின்ற நீதியின் விடைகள்தான் இப்படிப்பட்ட தீர்ப்புக்கு அடிப்படை. நீதிமாண்புகள் அழிகின்ற தருணத்தில் மக்கள்தான் சரியான தீர்ப்பினை வாக்கு சீட்டினால் உடைத்தெறிவார்கள் என்கிற நம்பிக்கையில் காலத்தை ஓட்டணும். பாண்டிச்சேரிக்கு சபாநாயகருக்கு அதிகாரமில்லை..நீதிமன்றம் மூக்கை நுழைக்கலாம்..ஏனென்றால் பீ ஜே பியின் நியமன உறுப்பினர்களின் விஷயமல்லவா? அதனால் அங்கே நீதியை மாற்றி சொல்ல விலை பேசப்பட்டிருக்கும்..தமிழகத்தில் பீ ஜே பி கால் பாதிக்கணுமாம்.. கூனர்களை காப்பாற்றி வருகின்றது பீ ஜே பி..ஆனால் ஒன்று நிச்சயம் இப்படிப்பட்ட நீதியை எழுதச்சொன்ன அக்கட்சிக்கு நிரந்தரமாக தடை விதித்துவிட்டார்கள் தமிழக மக்கள்..மாறுபட்ட தீர்ப்பில் மானமிழந்த நீதிமன்றங்கள்..

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-201807:19:39 IST Report Abuse

Kasimani Baskaran"நீதிக்கு விலை பேசி தீர்ப்பை வாங்கியதற்கு வெட்கப்படாதவர்களும் சரி.. கொடுக்கப்பட்ட நீதிக்கு கிடைத்த சன்மானமாக கவர்னர் பதவி வகிப்போரும் சரி" - டேய் சேகர்... ஒங்க அம்மா, குமாரசாமிக்கு காசு கொடுக்காமல் நீதியை வாங்கினாரா? திருந்தமாட்ட போல......

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-201810:12:46 IST Report Abuse

Kasimani Baskaran"டேய்" என்பது உங்களுக்கு வருத்தத்தை கொடுத்திருந்தால் மன்னிக்கவும்... பொது வெளியில் வரும் கருத்துக்களுக்கு நீங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய இல்லை சேகரன்......

Rate this:
Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா
15-ஜூன்-201817:38:38 IST Report Abuse

Matha, Jathi Saarpattra Thesapakthanநீங்க ரெண்டு(பிஜேபி, அதிமுக) பேரும் ஒழிந்து தொலையுங்கள்....

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement