வேடசந்தூர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேடசந்தூர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேடசந்துார், மாரம்பாடி ஊராட்சியின் 2 கிராம மக்கள், குடிநீர் கிடைக்காததால் ஒன்றிய அலுவலகத்தைமுற்றுகையிட்டனர்.மாரம்பாடி ஊராட்சியை சேர்ந்தவை தேவகவுண்டன்பட்டி மற்றும் தேவகவுண்டன்பட்டி காலனி. இரு ஊர்களிலும் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியினரின் குடிநீர் தேவைக்காக மூன்று போர்வெல்கள் அமைத்து குடிநீர் வழங்கி வந்தனர். காவிரி தண்ணீரும் முறையாக வந்தது.கடந்த மூன்று மாதங்களாக போர்வெல்கள் பழுதடைந்த நிலையில், காவிரி தண்ணீரும் முறையாக வராததால் மக்கள்குடிநீருக்கு சிரமப்பட்டனர். எனவே, நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று போர்வெல்லை சரிசெய்ய வேண்டும், குடிநீரை முறையாக வழங்க வேண்டும் எனக்கூறி, குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.மக்கள் கூறியதாவது: காவிரி தண்ணீர் வந்தும், மோட்டார் ஆபரேட்டர் முறையாக வினியோகிக்க வில்லை. பக்கத்து கிராமங்களுக்கு காவிரி நீர் செல்கிறது. ஆனால் எங்களது பகுதியை புறக்கணிக்கின்றனர். குடிநீரைமுறையாக வழங்கவேண்டும், என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை