நெல் நடவுக்கு போதிய இயந்திரங்கள் விவசாயிகள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெல் நடவுக்கு போதிய இயந்திரங்கள் விவசாயிகள் வலியுறுத்தல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கம்பம், கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இயந்திர நடவிற்கு தேவையான இயந்திரங்களைகொண்டு வர வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர்.கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். ஜூன் 17 ல் முல்லைப் பெரியாறுஅணையிலிருந்து நாற்றங்கால் அமைக்க தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முன்கூட்டியே கிடைத்த தண்ணீரை வைத்து நாற்றங்கால் வளர்த்துள்ளனர். இன்னமும் 10 நாட்களில் நடவு பணிகள் துவக்க உள்ளனர்.உத்தமபாளையம்,.சின்னமனுார், சீலையம்பட்டி, வீரபாண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளில் நாற்றங்கால் வளர்க்க துவங்கவில்லை.இயந்திர நடவிற்கு தேவையான பாய் நாற்றங்கால் அமைக்க தொழில்நுட்ப வல்லுனர்களை வேளாண் துறை அழைக்க வேண்டும். முன்னதாக நடவிற்குபோதிய இயந்திரங்களை வரவரழைக்க முன்வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். எக்டேருக்கு ரூ. 5 ஆயிரம்மானியமாக இயந்திர நடவிற்கு வழங்கப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அது கிடைப்பதாகவும், இம்முறை அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை