வாரிசு வேலைக்கு காத்திருக்கும் போலீஸ் குடும்பங்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாரிசு வேலைக்கு காத்திருக்கும் போலீஸ் குடும்பங்கள்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேவதானப்பட்டி, தேனி மாவட்டத்தில் பணியின் போது இறந்த போலீசாரின் வாரிசுளுக்கு வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பணியின்போது எஸ்.ஐ., மற்றும் போலீசார் பலர் இறந்துள்ளனர். அவர்கள் குடும்பங்களில் மனைவி, மகன், மகள் என பலர் பட்டதாரிகளாக உள்ளனர்.அவர்கள் வாரிசு வேலைக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் கிடைத்த பாடில்லை.மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஆண்டுதோறும் போலீஸ் குடும்பத்தில் வாரிசு வேலை வேண்டுவோர் பட்டியலை பெற்று வருகிறது. அவர்களுக்கு உதவியாளர் மற்றும் துப்புரவுப்பணியாளர் பணியிடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்பணியில் சேர தயக்கம்காட்டி வருகின்றனர். எனவே தகுதிக்கு ஏற்ப வாரிசு வேலை தர வேண்டும் என வலியுறுத்துகின்றன.பாஸ்கரன் எஸ்.பி., கூறுகையில், ''போலீஸ் குடும்பத்தில் வாரிசு வேலைக்கு காத்திருப்போரின் பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பெரும்பாலும் அந்தந்த துறையில் வாரிசு வேலைதர முன்னுரிமை வழங்கப்படுவதால், தாமதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 7 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. தாமதம் இன்றி வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், ''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X