கிடப்பில் போடப்பட்ட தானியங்கி வானிலை ஆய்வு மைய திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிடப்பில் போடப்பட்ட தானியங்கி வானிலை ஆய்வு மைய திட்டம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

போடி, மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயன்தரும் காலநிலை குறித்த தகவல்களை அளிக்க கூடிய தானியங்கி வானிலை ஆய்வு மைய திட்டம் ஆய்வோடு கிடப்பில் போடப்பட்டுள்ளது.திடீர் புயல் மழை, பெருவெள்ளம், அதிக வெப்பம் போன்றவை பயிர்களை பாதிக்கின்றன.இவை குறித்து முன்கூட்டியே தகவல் தெரிந்தால், அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் எடுக்க முடியும். மகாராஷ்டிரா மாநில நடைமுறைகளை பின்பற்றி, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் திராட்சை, நெல், வாழை, மா உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயன் பெறும் வகையில், ஊராட்சி ஒன்றிய அளவிலும் தானியங்கி வானிலை ஆய்வு மையங்களை அமைக்க, 10 ஆண்டுகளுக்கு முன் கோவை வேளாண் பல்கலை முடிவு செய்தது.இதற்கென இலவச தொலைபேசி எண் வழங்கவும், அதில் விவசாயிகள் தொடர்பு கொண்டால், ஒரு வாரத்திற்கு முன்கூட்டியே தட்ப வெப்பநிலை மாற்றம் குறித்து தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.தேனிமாவட்டத்தில் ஒன்றிய அளவில் அதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.ஆய்வை முடித்து திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை