உபரி நிலங்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம் மீட்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உபரி நிலங்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம் மீட்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தேனி, மாவட்டத்தில் உபரி நிலங்களை கணக்கெடுக்கும் பணிகள் தாலுகா வாரியாக நடந்து வருகின்றன. பழைய ஆவணங்களின் அடிப்படையில் ஆக்கிரமிப்புக்கள் இருந்தால் அவற்றை அகற்றுவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.மாநிலத்தில் உபரியாக உள்ள நிலங்களை மீட்க வகை செய்யும் நில சீர்திருத்த சட்டம் 1970 பிப். 15 முதல் அமலில் உள்ளது. இதன்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும், நில உரிமை உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு உபரி நிலத்தை, அரசு கையகப்படுத்தி வருகிறது. இக்கணக்கெடுப்பு 1983ல் துவங்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டது. மீண்டும் கடந்த பிப்ரவரி முதல் துவங்கப்பட்ட நிலையில், அரசு அதனை துரிதப்படுத்தி ஜூலை 8 க்குள் கணக்கெடுப்பு பணியை முடிக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் உபரி நிலங்கள் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ளன.மாவட்ட நிர்வாகம் இப்பணியை சம்பந்தப்பட்ட தாசில்தார்கள், நிலஅளவை பிரிவினரிடம் ஒப்படைத்தது. அதில் ஒருசிலர் தாலுகா அளவில் உபரி நிலங்கள் இல்லை என அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு தந்தனர். உபரி நிலங்கள் இல்லாத தாலுகாக்கள் இருக்க வாய்ப்பு மிக மிகக்குறைவு என கருதி அறிக்கை அளித்தவர்களிடம் மீண்டும் ஆய்வு செய்து உபரி நிலங்களை மீட்டெடுக்க உத்தரவிட்டுள்ளனர். இதனால் நில உச்சவரம்பு சட்ட விதிமுறைகளை ஊராட்சிகள் தோறும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் புன்செய், நன்செய் விவசாயிகள் உள்ளனர். இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கள் நிலங்களுக்கு ஆபத்து வருமோ என கவலைப்படுகின்றனர்.ஆனால் யாராக இருந்தாலும் அவர்களிடம் இருந்து உபரி நிலங்கள் மீட்கப்பட வேண்டும் என, அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் கறார் உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜூலை 8 க்குள் கணக்கெடுப்புப் பணிகளை முடித்து மாநில நில அளவை இயக்குனருக்கு பட்டியல் அனுப்ப அறிவுறுத்தி உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை