விளைச்சல் இருந்தும் கட்டுபடியான விலை இல்லை மக்காச்சோள விவசாயிகள் கவலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விளைச்சல் இருந்தும் கட்டுபடியான விலை இல்லை மக்காச்சோள விவசாயிகள் கவலை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

போடி, தேனி மாவட்டத்தில் மக்காச்சோளம் விளைச்சல் அதிகரித்தும் போதுமான விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் போடி, மீனாட்சிபுரம், அம்மாபட்டி, பத்திரகாளிபுரம், டொம்புச்சேரி, பெருமாள் கவுண்டன்பட்டி, அணைக்கரைப்பட்டி, ராசிங்காபுரம், பூதிப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். நோய் தாக்குதல் ஏற்படாததால் மற்றபயிர்களை விடஇதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.கடந்த ஆண்டு ஜூன், ஜூலையில் இதன் விளைச்சல், விலையும் அதிகரித்திருந்தது. குவிண்டால்(100 கிலோ) ரூ. ஆயிரத்தி 400 முதல் ரூ. ஆயிரத்தி 500 வரை விலை இருந்தது. தற்போது குவிண்டாலுக்கு ரூ. 200 முதல் 300 வரை குறைந்து ரூ.ஆயிரத்தி 300 வரை விற்பனையாகிறது. விளைச்சல் இருந்தும் போதுமான அளவிற்கு இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.அவர்கள் கூறுகையில்,'மக்காச்சோளத்தை பாப்கான் தயாரிக்க, பதப்படுத்தப்பட்டு வேக வைத்து சாப்பிட பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். சத்து மாவு தயாரிக்க பல்வேறு நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றன.இதனால் இதனை பயிரிடுவதில் பலரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் நேரடி தொடர்பு இல்லாமல் இடைத்தரகர்கள் மூலம் விற்பனையாவதால் விலை குறைந்து வருகிறது. குவிண்டால் ரூ. 2 ஆயிரம் வரை இருந்தால்தான் பயன்தரும், 'என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X