தினமும் 526 மெட்ரோ ரயில் சர்வீஸ்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தினமும் 526 மெட்ரோ ரயில் சர்வீஸ்கள்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னையில் தினமும், 526 மெட்ரோ ரயில் சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன. பரங்கிமலையில் இருந்து, சென்ட்ரலுக்கு மட்டும், 196 சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன.சென்னையில், விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து, கோயம்பேடு வழியாக சென்ட்ரல் வரையும், விமான நிலையத்தில் இருந்து, சின்னமலை வழியாக, தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வரையும், மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் போக்குவரத்தில், தினமும், 55 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர்.பரங்கிமலையில் இருந்து, சென்ட்ரலுக்கு தினமும், 196 சர்வீஸ்கள், சென்ட்ரல் - விமான நிலையம் இடையே, 134 சர்வீஸ்கள், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., - விமான நிலையம் இடையே, 196 சர்வீஸ்கள் என, மொத்தம், தினமும், 526 சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன.
பயணியர் கூட்டம் அதிகம் உள்ள, காலை, 8:00 முதல், 10:30 மணி வரையும், மாலை, 5:00 மணி முதல், இரவு, 8:30 மணி வரையும், 10 நிமிட இடைவெளியில், ரயில்கள் இயக்கப்படுகின்றன.மெட்ரோ ரயிலில் வருபவர்கள், வெளியிடங்களுக்கு சென்று வர, நிலையங்களில் இலவச சைக்கிள் வசதி மற்றும் கட்டண மோட்டார், ஸ்கூட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளன.
இத்துடன், எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில், மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வரும் பயணியர், அவர்களின் வாகனங்களுக்கு, பரங்கிமலை, ஆலந்துார், கோயம்பேடு மற்றும் திருமங்கலம் நிலையங்களில், மின்சாரம் சார்ஜ் செய்யும் வசதியும், விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது.இவ்வசதியில், ஒரே நேரத்தில் ஐந்து கார்கள், 10 மேட்டார் சைக்கிள்களுக்கு சார்ஜ் செய்யலாம். மெட்ரோ ரயில் நிலையங்களில், சைக்கிளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை