அங்கன்வாடி சாவிகளை ஒப்படைப்போம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி சாவிகளை ஒப்படைப்போம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தேவதானப்பட்டி, தேனி மாவட்டத்தில் அங்கன்வாடிப்பணியாளர்கள் கூடுதல் பொறுப்பு வகிக்கும் மையங்களின் சாவிகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் அங்கன் வாடிப்பணியாளர்கள், உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். குழந்தைகள், வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள் பராமரிப்பு, எடைபோடுதல், சத்துமாவு கொடுத்தல், ஆவணம் பராமரித்தல் உணவு சமைத்தல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.50 சதவீத அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடிப்பணியாளர்கள், உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் ஒவ்வொரு பணியாளர்களும் இரண்டு, மூன்று அங்கன்வாடி மையங்களை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் பணிநியமனம் இல்லை. இதனால் பணிச்சுமை அதிகரித்து வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.அங்கன்வாடிப்பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் பல்லவி பல்தேவிடம் அளிக்கப்பட்ட மனுவில், ' விரைவில் அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். இல்லையெனில் கூடுதல் பொறுப்பு வகிக்கும் மையங்களின் சாவியை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க தயாராக இருக்கிறோம்,''என தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது:கூடுதல் மையங்களால் பணிச்சுமை அதிகரித்து மன உளைச்சல் ஏற்படுகிறது. அதிக கவனம் செலுத்த முடியவில்லை. தாமதமின்றி பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை