ரோட்டில் வேகத்தடுப்புகளால் விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோட்டில் வேகத்தடுப்புகளால் விபத்து

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆண்டிபட்டி, பலத்த காற்றால் ரோட்டில் சாயும் வேகத்தடுப்புகளால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.மதுரை- தேனி மெயின் ரோட்டில், பல்வேறு இடங்களில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள் ளன. விபத்து ஏற்படும் இடங்களில் அப்பகுதி மக்களை திருப்திப்படுத்தும் விதத்தில் போலீசார் இவற்றை வைத்துள்ளனர்.தேசிய நெடுஞ்சாலையில் இரவில் வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தடுப்பு அருகில் வந்தவுடன் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. தற்போது காற்றுக்கான சீசன் துவங்கி உள்ளது.ஆண்டிபட்டி கணவாய் முதல் தேனி வரை 10 க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள வேகத்தடுப்புகள், காற்றின் வேகத்தால் ரோட்டில் சாய்ந்து விடுகிறது. அதனை சரிசெய்ய யாரும் முன்வருவதில்லை. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை