கழிவுநீர் வெளியேற்று நிலையத்தில் ரூ.26 கோடியில் கூடுதல் நிலையம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கழிவுநீர் வெளியேற்று நிலையத்தில் ரூ.26 கோடியில் கூடுதல் நிலையம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஆலந்துார்:ஆதம்பாக்கத்தில் செயல்படும் கழிவுநீர் வெளியேற்று நிலையத்திற்கு, 26.06 கோடி ரூபாய் செலவில் கூடுதல் நிலையம் கட்ட, குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.ஆலந்துார் மண்டலத்தில் ஆதம்பாக்கம், நிலமங்கை நகரில், 34 கோடி ரூபாய் செலவில், 25.06 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் வெளியேற்று நிலையம், 2003ல் கட்டப்பட்டது.மண்டலத்தில் உள்ள, 159 முதல், 167 வரையிலான, 9 வார்டுகளில் இருந்து, 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள், இந்த நிலையத்தில் இணைக்கப்பட்டு உள்ளன.
மேலும், கடற்படை காவலர் குடியிருப்பு மற்றும் கன்டோன்மென்டில் இருந்து, சில முறைகேடான இணைப்புகள் நிலையத்துடன் இணைக்கப்பட்டு உள்ளன.இதனால், மழையின் போது கொள்ளளவை விட அதிகமான அளவு கழிவுநீர் வருவதால், அதை வெளியேற்ற முடியாமல்குடிநீர் வாரியம் திணறுகிறது.
அதோடு, நிலையத்தை சுற்றி உள்ள நியூ காலனி, பாரதிதாசன் நகர், பாலாஜி நகர், கூட்டுறவு நகர் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட தெருக்கள், கழிவுநீரால் பாதிக்கப்படுகின்றன.இதனால், நங்கநல்லுார் பகுதியை மையப்படுத்தி கூடுதல் நிலையம் கட்ட, குடிநீர் வாரியம் முடிவு செய்தது. இதற்காக, நுாறடி சாலையில் மாநகராட்சி இடம் வழங்கியது. ஆனால், அப்பகுதிமக்கள் எதிர்ப்பால் அங்கு நிலையம் கட்டுவது கைவிடப்பட்டது.
இந்நிலையில், தற்போதுள்ள நிலையத்தை ஒட்டி, கூடுதல் நிலையம் கட்ட, குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, 26.06 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.கூடுதல் நிலையம் கட்டும் பணி, ஓரிரு மாதத்தில் துவங்கும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X