ஒட்டன்சத்திரம் நகராட்சியில் கலங்கல் குடிநீர் வினியோகம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் கலங்கல் குடிநீர் வினியோகம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஒட்டன்சத்திரம், ஒட்டன்சத்திரம் நகராட்சி, ஏ.பி.பி.நகர் ஹவுசிங் போர்டில் நுரையுடன் கூடிய துர்நாற்றம் வீசிய குடிநீர் நீர் வினியோகம் செய்ததால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டன்சத்திரம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பத்து நாட்கள் கழித்து நேற்று காலை ஏ.பி.பி.நகரில் மேட்டுத் தெருவில் குடிநீர் திறந்துவிடப்பட்டது. இப்பகுதியில் உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீரை பிடித்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நுரையுடன் வந்த கலங்கல் நீர் துர்நாற்றம் அடித்தது. தண்ணீர் திறந்துவிடும் நாள் நேரம் குறித்து முன் கூட்டியே தகவல் தெரிவிப்பது இல்லை. இப்பகுதியில் உள்ள போர்வெல்லில் நீர் இருந்தும் பயன்பாடில்லாமல் உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை