பூம்புகாரில் நகைகள் கண்காட்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூம்புகாரில் நகைகள் கண்காட்சி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:தமிழக அரசின் பூம்புகார் நிறுவனத்தின் சார்பில், நகைகள் கண்காட்சி துவங்கி உள்ளது.பூம்புகார் என அழைக்கப்படும் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் உற்பத்தியை சந்தைப்படுத்தவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், நாடு முழுவதும் கண்காட்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில், நகைகள் கண்காட்சி துவக்கப்பட்டு உள்ளது.
இந்த கண்காட்சியில், தமிழகத்தின் கலைநயமிக்க நவரத்தின கற்கள், ராசி கற்கள், காதணிகள், பவள மாலைகள், நெக்லஸ் வகைகள், வெள்ளி நகைகள், சந்தன மாலை, ருத்திராட்ச மாலை, ஸ்படிக மாலை, பாரம்பரிய நகை வகைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
மேலும், ஐதராபாத் முத்து நகை வகைகள், ரூபி, மரகதம், நீலக் கற்களிலான மாலை வகைகள் ஆகியவை பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன. கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அனைத்து கைவினைப் பொருட்களுக்கும், 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஜூன், 30ம் தேதி வரை நடத்தப்படும் இந்த கண்காட்சிக்கு, தினமும் காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை