பேருந்து நிழற்குடை திருட்டு?| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேருந்து நிழற்குடை திருட்டு?

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிந்தாதிரிப்பேட்டை:சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலைய பேருந்து நிழற்குடை, இரவோடு இரவாக திருடப்பட்டுள்ளது.
ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட, 62வது வார்டு, சிந்தாதிரிப்பேட்டையில், துணை மேயர் கபால மூர்த்தி சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலைய பேருந்து நிழற்குடையை, இரு தினங்களுக்கு முன், இரவோடு இரவாக, மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதனால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர், வெயிலில் அவதிஅடைந்து வருகின்றனர்.இது குறித்து, அப்பகுதிமக்கள் கூறியதாவது:சில மாதங்களுக்கு முன், தனியார் நிறுவனத்தினர், அந்த நிழற்குடையை அமைத்தனர். 'மாநகராட்சி அனுமதி பெறாமல்வைக்கப்பட்டது' என்றால், அப்போதே அதை அகற்றி இருக்கலாம். நிச்சயமாக, அந்த நிழற்குடை, மர்மநபர்களால் திருடப்பட்டிருக்கும்.
பேருந்து நிழற்குடையே திருடுபோகும் அளவிற்கு, இந்த பகுதியில் பாதுகாப்பு கேள்விகுறியாகி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, மாநகராட்சி மேல் அதிகாரியிடம் கேட்ட போது, 'சம்பவ இடத்தை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X