ராஜ் தாக்கரே பிறந்த நாள்: பெட்ரோல் விலை குறைப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராஜ் தாக்கரே பிறந்த நாள்: பெட்ரோல் விலை குறைப்பு

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ராஜ் தாக்கரே ,ராஜ் தாக்கரே பிறந்த நாள், பெட்ரோல் விலை குறைப்பு,   மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா , நவநிர்மாண் சேனா ,
Raj Thackeray, Raj Thackeray birthday, petrol price , Maharashtra Navnirman Sena, Navnirman Sena,

புதுடில்லி : மஹாராஷ்டிர மாநிலத்தில், மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தலைவர், ராஜ் தாக்கரே பிறந்த நாளையொட்டி, 1 லிட்டர் பெட்ரோல், 4 - 9 ரூபாய் வரை, விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, மஹாராஷ்டிர மாநிலத்தில், 1 லிட்டர் பெட்ரோல், 84.26 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி, போராட்டங்களும் நடக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால், பெரிதும் பாதிக்கப்பட்ட மஹாராஷ்டிர மக்களுக்கு, ஓர் இன்ப அதிர்ச்சியை, மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி அளித்துள்ளது. அந்த கட்சி தலைவர், ராஜ் தாக்கரேவுக்கு, நேற்று(ஜூன் 14), 50வது பிறந்த நாள்.

அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அவரது கட்சி நிர்வாகிகள், தலைநகர் மும்பையில் உள்ள குறிப்பிட்ட பெட்ரோல், 'பங்க்'குகளில், 1 லிட்டர் பெட்ரோலை, 4 - 9 ரூபாய் வரை, குறைத்து விற்பனை செய்தனர். இதையடுத்து, பெட்ரோல், 'பங்க்'குகளில், பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. அனைவரும் இரண்டு சக்கர வாகனங்களுடன், நீண்ட வரிசையில் காத்திருந்து, மகிழ்ச்சியுடன் பெட்ரோல் நிரப்பினர்.

ஷிவாடி சட்டசபை தொகுதியில் உள்ள பெட்ரோல், 'பங்க்'குகளில், 1 லிட்டர் பெட்ரோல், ஒன்பது ரூபாய் குறைக்கப்பட்டு, 75.26 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கான செலவை, ராஜ் தாக்கரேயின், மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி ஏற்றது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-ஜூன்-201810:58:04 IST Report Abuse
இந்தியன் kumar இது ஒரு விளம்பரம் ஒரு பத்து ஏழை குடும்பங்களை தத்து எடுக்கலாம்.. இல்லை என்றால் ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
15-ஜூன்-201810:43:25 IST Report Abuse
ஸாயிப்ரியா ஒவ்வொரு தலைவரும் பிறந்த நாள் கொண்டாடினால் மக்களின் பெட்ரோல் சுமை குறையுமே.ஆரம்பித்த வருக்கு வாழ்த்துக்கள் இதற்காக ஒரு பைசா குறைத்து விடாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
POPCORN - Chennai ,இந்தியா
15-ஜூன்-201809:06:45 IST Report Abuse
POPCORN வாழ்க ராஜ் தாக்ரே
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
15-ஜூன்-201808:39:09 IST Report Abuse
rajan அப்போ இனி சுடலை கு.கட்சியும் ஆயாம்மாவழி ஆட்சியாளன்மாரும் அவுக பெறந்த நாளை விட்டு கலாய்ச்சுட வேண்டியது தான். இரு திராவிட கொள்ளையரிடமும் மக்கள் பணம் கட்சி நிதின்னு கொட்டிகிடக்குதே. செய்வீர்களா?
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
15-ஜூன்-201808:23:23 IST Report Abuse
தேச நேசன் நம்ம ஊர் டோக்கானர் கொடுத்த ஐடியா போல இருக்கு இவரு தேர்தலுக்கு அட்வான்ஸாவே டோக்கன் தறாரு ஆனா அங்க இருப்பது டுமீளர்களில்லையே
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜூன்-201808:12:49 IST Report Abuse
Srinivasan Kannaiya அடடே ..தமிழகத்தில் கூட மு க வின் பிறந்த நாள் வந்ததே... அந்த கட்சி அவர்களுக்கும் இருக்கும் வசதியில் ஒரு நாள் முச்சூடும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இலவசமாக பெட்ரோல் டீசல் தந்து இருக்கலாம்...
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
15-ஜூன்-201811:53:18 IST Report Abuse
Pasupathi Subbianஅங்கே ஒன்னு வே மட்டுமே. வரவு மட்டும் உண்டு. வரவு , சொத்து கொள்முதல் கணக்கு மட்டுமே . பற்றுவழி செலவு கணக்குகள் கிடையாது....
Rate this:
Share this comment
Cancel
15-ஜூன்-201807:08:09 IST Report Abuse
ஆப்பு ஒரு ரூவா போட்டா ஒரு கோடியாவது திருப்பி எடுக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
15-ஜூன்-201805:07:06 IST Report Abuse
Renga Naayagi தினம் தினம் பிறந்த நாள் வரணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை