கார் கோளாறு செலவு மறுப்பு காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கார் கோளாறு செலவு மறுப்பு காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:கார் கோளாறு செலவு மறுத்த காப்பீடு நிறுவனம், வாடிக்கையாளருக்கு, 35 ஆயிரம் ரூபாய் வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை, மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த சண்முகராஜ், 50. இவரது, 'வோக்ஸ்வேகன்' காரை, வீட்டில் நிறுத்த முயன்றபோது, மாடிப்படிகளில் மோதி, காரின் இருபக்க கதவுகளும், முன்புற பம்பரும் சேதமடைந்தது.பழுதுபார்க்க, 35 ஆயிரம் ரூபாய் செலவானது. தனியார் நிறுவனத்தில், வாகன விபத்து காப்பீடு பாலிசி வைத்திருந்ததால், பழுது பார்ப்பு செலவு கோரினார்.காப்பீடு நிறுவனம் மறுத்ததால், பிரச்னை ஏற்பட்டது. 'பழுது பார்த்த செலவுடன், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்' என, சென்னை மாவட்ட, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையில், 'நிபந்தனைக்கு உட்பட்டு, பழுது பார்த்த செலவிற்கு குறிப்பிட்ட தொகை மட்டுமே, இழப்பீடு வழங்க முடியும், மனுதாரர் கோரிய, முழுத் தொகையும் வழங்க முடியாது' என, காப்பீடு நிறுவனம் தெரிவித்தது.'காப்பீடு நிறுவனம், உரிய சேவை வழங்கவில்லை. கார் பழுதுபார்த்த செலவு, 35 ஆயிரம் ரூபாயுடன், வழக்கு செலவு, 5,000 ரூபாயும், மனுதாரருக்கு, காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும்' என, நீதிபதி ஜெயபாலன் உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை