ஐ.சி.எப்., குடியிருப்புகளில் கண்காணிப்பு கேமரா வசதி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.சி.எப்., குடியிருப்புகளில் கண்காணிப்பு கேமரா வசதி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:ஐ.சி.எப்., குடியிருப்புகளில், பாதுகாப்பை பலப்படுத்த, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.சென்னையில், ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான, ஐ.சி.எப்., வளாகம் மற்றும் தொழிற்சாலைகளில், அனுமதியற்ற நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இத்துடன், ஐ.சி.எப்., குடியிருப்புகளில், அனுமதியற்ற நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என, ஐ.சி.எப்., பணியாளர்களும், ஊழியர்களும் வலியுறுத்தி வந்தனர்.இதனையொட்டி, ஐ.சி.எப்., குடியிருப்புகளில், கண்காணிப்பு கேமராக்கள், நேற்று முதல் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வசதி குறித்து, ஐ.சி.எப்., பாதுகாப்பு பிரிவு அதிகாரி கூறியதாவது:ஐ.சி.எப்.,பில் உள்ள, நான்கு பகுதி குடியிருப்புகள், நுழைவு வாயில் சாலை பகுதி ஆகிய இடங்களில், தலா, நான்கு கண்காணிப்பு கேமராக்கள் என, 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.அதிக சக்தி வாய்ந்த இந்த கேமராக்களில், இரவிலும் காட்சிகள் தெளிவாக பதிவாகும். கடுமையான தட்ப வெப்ப நிலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்டது.
மின்சாரம் தடை பட்டாலும், கேமராக்கள் இயங்கும் வகையில், 'யுபிஎஸ்' வசதி செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள், ஒவ்வொரு காலனியிலும் உள்ள, பாதுகாப்பு பூத்துகளில் வைக்கப்பட்டிருக்கும்,எல்.இ.டி., 'டிவி'க்களுடன் இணைக்கப்பட்டு, வாயில்களில் மனிதர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படும்.இவ்வாறு அதிகாரி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை