தேவர் பேரவை கண்டனம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேவர் பேரவை கண்டனம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஒட்டன்சத்திரம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறை, 6ம் வகுப்பு பாடத்தில் இருந்து நீக்கியதற்கு தமிழ்நாடு தேவர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.இதன் மாநிலத் தலைவர் முத்தையா கூறியதாவது:தேசிய தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இந்திய நாட்டின் விடுதலைக்காக வாழ்நாளில் நான்கில் ஒரு பகுதியை சிறையில் கழித்தவர். சொத்துக்களை ஏழை மக்களுக்கு தானமாக கொடுத்தவர். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று வழிபட்டவர்.அவரது வரலாறை 6ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியதை கண்டிக்கிறோம். வீரமங்கை வேலுநாச்சியார், மருது பாண்டியர்களின் வாழ்க்கை வரலாறையும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை