மாம்பழம் கிலோ ரூ.20க்கு விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாம்பழம் கிலோ ரூ.20க்கு விற்பனை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருத்தணி:மாம்பழம் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டாததால், 1 கிலோ, 20 ரூபாய் என விற்பனை செய்கின்றனர்.திருத்தணி பஜாரில், 50க்கும் மேற்பட்ட பழக்கடைகள் உள்ளன. தற்போது, மாம்பழம் சீசன் என்பதால், பழக்கடைகளில், மாம்பழம் விற்பனை அதிகளவில் உள்ளது. 10க்கும் மேற்பட்ட வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. வாடிக்கையாளர்கள் மாம்பழங்கள் வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டாததால், விற்பனை குறைவாக உள்ளது. மாம்பழம் விற்பனை இல்லாததால், வியாபாரிகள் நஷ்டம் அடைகின்றனர்.இது குறித்து, திருத்தணி பழ வியாபாரி, ஆர்.வெங்கடேசன் கூறியதாவது:''ஆந்திர மாநிலம், புத்துார் பகுதியில் இருந்து, பங்கனப்பள்ளி, ருமானியா, செந்துாரா, மல்கோவா, காலாபட் போன்ற, 10 வகையான மாம்பழங்கள் வாங்கி வந்து, விற்பனை செய்கிறோம்.''தற்போது, மாம்பழங்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டாததால், மேற்கண்ட பழங்கள், 1 கிலோ, 20 - 30 ரூபாய் என, விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ விற்றால், 5 ரூபாய் மட்டுமே லாபம் கிடைக்கும். விற்பனை சரிவால், விளைச்சல் அதிகம் என்பதால், மாம்பழத்திற்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை''.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X