ரெங்கமலையில் வாகனங்கள் மோதி இறக்கும் விலங்குகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரெங்கமலையில் வாகனங்கள் மோதி இறக்கும் விலங்குகள்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேடசந்துார், ரெங்கமலை அடிவார பகுதியில் ரோட்டை கடக்க முயலும் விலங்குகள் வாகனங்கள் மோதி அநியாயமாக பலியாகின்றன.திண்டுக்கல் - -கரூர் மாவட்ட எல்லையில், ரெங்கமலை உள்ளது. இந்த மலையையொட்டி தேசிய நெடுஞ்சாலை குறுக்காக செல்கிறது. இந்த மலைப்பகுதியில் மயில், முயல், குரங்குகள், பாம்புகள் மற்றும் பறவைகள் உள்ளிட்ட விலங்கினங்கள் உள்ளன.நேற்று முன்தினம் கணவாய் பகுதியில் திண்டுக்கல்- - கரூர் மெயின் ரோட்டில், இரவு நேரத்தில் வாகனத்தில் விலங்கு ஒன்று அடிபட்டு இறந்து கிடந்தது. உடல் நசுங்கிய நிலையில், கிடந்த அந்த விலங்கு காட்டுப்பூனையாக இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். சிலர் புலியின் வால் என புரளி கிளப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.வனப்பகுதியில் நெடுஞ்சாலையில் விரையும் வாகனங்களால் விலங்குகள் பலியாவது தொடர்கிறது. வனஉயிரினங்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை