பஸ்ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு கண்துடைப்பாக அகற்றம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு கண்துடைப்பாக அகற்றம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இது வழக்கமான கண்துடைப்பு நடவடிக்கை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் தினமும் 600க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ்ஸ்டாண்டில் பிளாட்பார்ம் வரை ஆக்கிரமித்து டீ, மிக்சர், வடை, இட்லி கடைகள் வைத்துள்ளனர். இதனால் பயணிகள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அடுப்பில் இருந்து சிதறும் தீப்பொறி பயணிகள் மீது விழுகிறது.கடைக்காரர்களும், கடைக்கு வருவோரும் வாகனங்களை பஸ்கள் நிற்கும் ரேக்குகள் முன்பு நிறுத்துவதால் பஸ்சை நிறுத்த முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது.பழக்கடைகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பை மாதம்தோறும் மாநகராட்சி நிர்வாகம் அகற்றுகிறது. அகற்றி விட்டு சென்ற சில மணிநேரத்தில் மீண்டும் அதே இடத்தில் கடைகள் முளைக்கின்றன.சம்பிரதாயத்திற்கு நடத்தும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் கடுமையாக்க வேண்டும்,என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.கமிஷனர் மனோகரன் கூறியதாவது:அகற்றிய இடத்தில் மீண்டும் ஆக்கிரமித்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X