புதிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அருகே, பெருவாயல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், இந்த கல்வி ஆண்டில், 21 மாணவ - மாணவியர் புதிதாக சேர்ந்தனர்.அவர்களில், 11 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பள்ளியின் தலைமை ஆசிரியர் ரூத் சம்பூர்ணம் இசபெல்லா, உதவி தலைமை ஆசிரியர் கவிதா ஆகியோர் தலைமையில், புதிதாக சேர்ந்த மாணவர்களை, பழைய மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.அப்போது, புதிய மாணவர்களுக்கு, கிரீடம் அணிவித்து, மலர் துாவி, கைகளை தட்டி, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்வில், புதிய மாணவர்களின் பெற்றோரும் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை