அகதிகளும் 'நீட்' தேர்வு சலுகை வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அகதிகளும் 'நீட்' தேர்வு சலுகை வலியுறுத்தல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு 'நீட்' தேர்வில் சலுகை வழங்குவது குறித்து அரசிடம் தெரிவிக்கப்படும், என மறுவாழ்வுத்துறை இயக்குனரின் நேர்முக உதவியாளர் பாஸ்கரன் கூறினார். திண்டுக்கல்லில் இலங்கை அகதிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் பேசியதாவது: அகதிகள் இலங்கை செல்ல விரும்பினால் விமானம் மூலம் குறைந்தளவு பொருட்களை எடுத்து செல்லலாம். இதற்கு அகதிகளுக்கான அமைப்பில் விண்ணப்பிக்க வேண்டும். குடியுரிமை வழங்குவது இரண்டு நாடுகள் பேசி முடிவு எடுக்க வேண்டிய விஷயம். நான் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது.அகதிகளின் குழந்தைகளுக்கு பொறியல், மருத்துவம் உட்பட அனைத்து பாடப்பிரிவுகளிலும் சேர்வதற்கு உதவிகள் செய்யப்படுகிறது. பிற மாணவர்களுக்கு வழங்குவது போல அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.நீட் தேர்வு, குடிநீர், வீடு, மின்சாரம், ரோடு, முகாம் விட்டு முகாம் செல்வது, திருமணம், பிறப்பு பதிவு உட்பட பல சலுகைகள் கேட்கின்றனர். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் அரசிடம் தெரிவிக்கப்படும், என்றார். இவருடன் மாவட்ட பிற்பட்டோர் நல அதிகாரி அல்லி ராணி, அகதிகள் தாசில்தார் வெங்கடேஷன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை