தக்காளி, கோஸ், மாங்காய் விலை வீழ்ச்சி பீன்ஸ், அவரை, முருங்கை, 'ஜிவ்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி, கோஸ், மாங்காய் விலை வீழ்ச்சி பீன்ஸ், அவரை, முருங்கை, 'ஜிவ்'

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம்:விளைச்சல் அதிகரித்துள்ளதால், தக்காளி, கோஸ், மாங்காய் உள்ளிட்ட காய்கறிகள் காஞ்சிபுரத்தில் கிலோ, 10 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.கடந்த டிசம்பரில் இருந்து மார்ச் மாதம் வரை, விளைச்சல் அதிகரிப்பால், காய்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்து இருந்தது. குறைந்தபட்சமாக தக்காளி, பீட்ரூட், கேரட், கோஸ், வெண்டை, கத்தரிக்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள், ஐந்து முதல், 10 ரூபாய் வரை விற்கப்பட்டன.அப்போது அதிகபட்சமாக, அவரை, பீன்ஸ், 25 ரூபாய்க்கு விற்கப்பட்டன. கோடை காலம் துவங்கியபின், காய்கறிகளின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. தற்போது தக்காளி, வெங்காயம், கோஸ், மாங்காய் 10 முதல் 15க்கு கிடைத்தாலும், மற்ற காய்கறிகள், குறைந்தபட்சம் கிலோ, 20 முதல், அதிகபட்சமாக, 55 ரூபாய் வரை விற்கப்படுகிறது.ராஜாஜி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத்தலைவர், எஸ்.சரவணன் கூறியதாவது:கர்நாடகா, ஓசூர், ஆந்திராவில் பெரும்பாலான காய்கறிகள் காஞ்சிபுரத்திற்கு வரவழைக்கப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால், பீன்ஸ், அவரை, முருங்கை உள்ளிட்ட காய்கறிகள் விளைச்சல் குறைவால், இவற்றின் விலை உயர்ந்து வருகிறது.தற்போதைய சூழலுக்கு நன்றாக விளையும் காய்கறிகளான தக்காளி, கோஸ், மாங்காய் உள்ளிட்ட காய்கறிகள் விலை குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை