கட்டண நிலுவை எதிரொலி தள்ளி போகும் சிட்கோ பராமரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கட்டண நிலுவை எதிரொலி தள்ளி போகும் சிட்கோ பராமரிப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, திருமங்கலம் கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டையில் கட்டண நிலுவை எதிரொலியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது தள்ளிபோகிறது.இத்தொழிற்பேட்டையில் தெரு விளக்கு, குப்பை சேகரித்தல், ரோடு ஆகியவை மோசமாகவுள்ளதால் பராமரிப்பு பணிகளை தங்களிடம் ஒப்படைக்க தொழிலதிபர்கள் அரசை வலியுறுத்தியிருந்தனர். இதற்கிடையில் சிட்கோ தொழிற்பேட்டை பராமரிப்பு பணிக்காக தொழில் நிறுவனங்களிடமிருந்து ஆண்டுதோறும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்தொழிற்பேட்டையில் 580 நிறுவனங்கள் உள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் பராமரிப்பு கட்டணத்தை பல ஆண்டுகளாக செலுத்தவில்லை. வளாக பராமரிப்பு, குடிநீர், தொழிற்சாலை கட்டமைப்பு மேம்பாடு திட்ட மானியம், திடக்கழிவு மேலாண்மை பிரிவுகளில் இந்நிறுவனங்கள் 30 லட்சத்து 48 ஆயிரத்து 141 ரூபாய் வரை அரசுக்கு செலுத்த வேண்டும். அதை செலுத்தினால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இயலும் என சிட்கோ அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது: மாநிலத்தில் 2வது பெரிய தொழிற்பேட்டையான கப்பலுாரில் பராமரிப்பு கட்டணமாக தொழில் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 250 முதல் 1000 ரூபாய் வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை கூட நிறுவனங்கள் பாக்கி வைத்துள்ளன. அதை வசூலித்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர், என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை